Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கோவை விமான நிலையம் ரூ.300 கோடியில் விரிவாக்கம் : 400 வீடுகளை அகற்ற முடிவு

Print PDF

தினமலர் 20.08.2010

கோவை விமான நிலையம் ரூ.300 கோடியில் விரிவாக்கம் : 400 வீடுகளை அகற்ற முடிவு

கோவை : ""கோவை விமான நிலையம் 300 கோடி ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தப்படும்; இதற்காக 400 வீடுகள் அகற்றப்பட உள்ளன,'' என, கோவை கலெக்டர் உமாநாத் தெரிவித்தார்.

கோவை மாவட்ட திட்டக்குழுக் கூட்டம், கலெக்டர் உமாநாத் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கோவை விமான நிலைய விரிவாக்கம் பற்றி முதலில் விவாதம் எழுந்தது. தற்போதுள்ள விமான நிலையம் விரிவாக்கப்படுமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்து கலெக்டர் பேசியதாவது:

கோவை விமான நிலையத்தை 300 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நகர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தொழில் முன்னேற்றத்துக்காகவும் சர்வேதேச விமான நிலையமாக மாற்ற இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யும் அதே நேரத்தில் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு இல்லாத வகையில், இந்த திட்டம் நிறைவேற்றப்படும். விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு, 848 ஏக்கர் பரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருமளவு குடியிருப்புகள் இடிபடும் என்பதால் மறு ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, 816 வீடுகளை இடித்து அகற்ற வேண்டுமென்ற நிலை இருந்தது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, விரிவாக்கப் பகுதி குறைக்கப்பட்டது. இறுதியாக 613 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, 400 வீடுகளை அகற்ற முடிவு செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 8 ஏக்கர் பரப்பைக் குறைத்தால், மேலும் 100 வீடுகள் அகற்றுவதைத் தவிர்க்க முடியும். ஆனால், சர்வதேச விமான ஓடுதளம் (ரன்வே) அமைக்க முடியாது.

எனவே, இந்த திட்டத்தில் வேறு மாற்றங்கள் எதுவும் செய்ய வாய்ப்பில்லை. விமான நிலைய விரிவாக்கத்தினால் அவிநாசி ரோட்டுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. ஏனெனில், விமான நிலையத்துக்கான நுழைவாயில், அணுகுசாலை ஆகியவை, எல் அண்ட் டி பை-பாஸ் ரோடு அருகில் அமையும்.

இந்த சாலையை விமான நிலைய ஆணையமே அமைத்துக் கொள்ளும். அதனால், அவிநாசி ரோட்டில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல் மேலும் குறையும் வாய்ப்புண்டு. இந்த விரிவாக்கத்தில் அவிநாசி ரோடு மற்றும் அதையொட்டியுள்ள குடியிருப்புகள் எதுவும் பாதிக்கப்படாது. விமான நிலைய விரிவாக்கத் திட்டம், அரசின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கும். தற்போதுள்ள விமான நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு, கலெக்டர் உமாநாத் தெரிவித்தார்.

கோவை விமான நிலைய இயக்குனர் பீட்டர் ஆபிரஹாம் பேசுகையில், ""கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாறுவதால் நகர வளர்ச்சிக்கு பெரிதும் பயன் கிடைக்கும். எனவே, அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.

எந்தெந்த குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்பது பற்றி கூட்டத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை. மாவட்ட ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர்கள் செந்தில்குமார், சுப்ரமணியம், கணேசமூர்த்தி, சுப்பையன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

"பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும்'

Print PDF

தினமணி 19.08.2010

"பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும்'

திருச்சி, ஆக. 18: திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள தார்ச் சாலைகள், சிமென்ட் கான்கிரீட் தளங்கள் மற்றும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால்கள் ஆகியவை தரமாக அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதியில் ஒரு சில இடங்களில் சாலைகளைச் சேதப்படுத்தி விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சம்பந்தப்பட்டவர்களே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், அவை மாநகராட்சி நிர்வாகத்தால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அகற்றப்படும். அதேநேரத்தில், பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சியின் போது அரசு விதிகளுக்கு உள்பட்டு விளம்பர பேனர்கள் வைத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் அவர்.

 

ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி முன்வருமா?

Print PDF

தினமலர் 19.08.2010

ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி முன்வருமா?

திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 10 அடி அகல ரோட்டை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் அகற்றினால், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து காமாட்சி அம்மன் கோவில் வழியாக இலகு ரக வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்டது காமாட்சியம்மன் கோவில் வீதி. இவ்வீதியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல 10 அடி அகலத்தில் குறுக்குச்சந்து உள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு பின்பகுதியில் இவ்வழித்தடம் செல்கிறது. இந்த வழித்தடம் மிக குறுகலான சந்தாக உள்ளது. அதில், ஏழு அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பை மாநகராட்சி நிர்வாகம் அகற்றினால், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டூவீலர்கள் செல்லும் அளவுக்கு பாதை அமைக்கலாம். ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களும் இவ்வழியை பயன்படுத்த முடியும். பஸ் ஸ்டாண்டுக்குள் வாகனம் வருவதை தவிர்க்க, இந்த மாற்றுவழியை பயன்படுத்த முடியும். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் இறங்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டும

Last Updated on Thursday, 19 August 2010 08:38
 


Page 73 of 204