Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

"ஆக்கிரமிப்பு குடிசைகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்'

Print PDF

தினமணி 13.08.2010

"ஆக்கிரமிப்பு குடிசைகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்'

காரைக்கால், ஆக 12 : காரைக்காலில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, கட்டப்பட்ட குடிசைகள் முன்னறிவிப்பின்றி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட துணை ஆட்சியர் செ. ஆபேல்ரொசாரியோ வியாழக்கிழமை தெரிவித்தார்.

காரைக்காலில் இலவச மனைப்பட்டா ஏழைகளுக்கு தரப்படவில்லை, இடத்துக்கான உரிம நகலைத் தந்துவிட்டு, தற்போது வரையில் இடத்தை வருவாய்த் துறையினர் காட்டவில்லையென்ற புகார் நிலவுகிறது.

இதையடுத்து, அரசு நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நில ஆர்ஜிதம் செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாக அரசு தரப்பினர் பதில் தெரிவித்து, படிப்படியாக பட்டா தரப்படுமென தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில், கடந்த மாதம் காரைக்கால் அருகே உள்ள காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதியில் சில குடும்பத்தினர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடிசைகள் போட்டனர். இது குறித்து வருவாய்த்துறையினர், போலீஸôர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லையென புகார்கள எழுந்தன.

இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் செ. ஆபேல்ரொசாரியோ வியாழக்கிழமை கூறியது:

காரைக்காலில் குறிப்பாக, காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதியில்தான் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உரிய இடம் தருவதாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் உடன்படவில்லை. சட்டத்துக்கு புறம்பான செயல் என்பதால், முன்னறிவிப்பின்றி அவற்றை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அது எப்போது என்பதை உறுதியாக தற்போது சொல்ல இயலாது என்றார் துணை ஆட்சியர்.

 

ஆக்கிரமிப்பு நீக்கம் செங்கல்பட்டில் 3-வது நாளாக தொடர்ந்தது

Print PDF

தினமணி 12.08.2010

ஆக்கிரமிப்பு நீக்கம் செங்கல்பட்டில் 3-வது நாளாக தொடர்ந்தது

செங்கல்பட்டு, ஆக. 11: செங்கல்பட்டில் ஆக்கிரமிப்பு நீக்கும் பணி 3-வது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.

÷காவல் துறையினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் எவ்வித முன்னறிவிப்பின்றி ராஜாஜி தெருவின் ஒருபகுதியில் மாலை 4 மணிக்கு மேல் ஆக்கிரமிப்பு நீக்கப்பட்டது. இது செல்வாக்கு உள்ளவர்கள் பகுதி என்பதால் மற்ற பகுதிகளில் நடந்ததுபோல முழுமையாக நீக்காமல் பெயருக்கு மேலோட்டமாக அகற்றியதாக கடை வியாபாரிகள் புகார் கூறினர்.

மேலும் திடீர், திடீர் என நகராட்சி எடுக்கும் முடிவினால் வியாபாரிகள் மட்டுமல்லாமல் அனைவரும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அகற்றும் பணியை மாலை நேரத்தில் நடத்தியதால் அவ் வழியே வந்த பள்ளி மாணவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. ஆக்கிரமிரப்பு நீக்கும் பணி காரணமாக அப்பகுதியில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

 

ஆக்கிரமிப்புகள் நீக்கம்: செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு

Print PDF

தினமணி 11.08.2010

ஆக்கிரமிப்புகள் நீக்கம்: செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு

செங்கல்பட்டு, ஆக. 10: முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டதால் செங்கல்பட்டு ராஜாஜி தெரு பகுதியில் செவ்வாய்க்கிழமை பரபரப்பு நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டன. செங்கல்பட்டு ராஜாஜி தெரு, குடியிருப்பு பகுதியாகவும் வியாபார தலமாகவும் உள்ளது. இப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் உள்ளன. இதனால் தெரு குறுகிப்போய் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை நீக்கும் பணியில் செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். கடையின் முகப்புகள், படிகட்டுகள், பெயர்ப் பலகைகள் இடித்து நீக்கப்பட்டன.

இதனால் ராஜாஜி தெரு, மகாதேவன் தெரு உள்ளிட்ட தெருக்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டன. இதனால் அங்குள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. முன்அறிவிப்பு ஏதுமின்றி பரபரப்பான காலை நேரத்தில் ஆக்கிரமிப்புகளை நீக்கும் பணி மேற்கொண்டதால் கடையில் இருந்த பொருள்கள் சேதம் அடைந்ததாக கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். முன்கூட்டியே அறிவிப்பு செய்திருந்தால் நாங்களே பொருள்களை சேதமின்றி அகற்றி இருப்போம் என்றும் கூறினர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளை கேட்டபோது அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் மெüனம் சாதித்தனர்.

பரபரப்பான சூழ்நிலையைத் தொடர்ந்து அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொருள்கள் வாங்க வந்த சுற்றுப்புற கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதேபோன்று பஜார் வீதி, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நீக்க இருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.

 


Page 75 of 204