Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகள் நீக்கம்

Print PDF

தினமணி 10.08.2010

செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகள் நீக்கம்

செங்கல்பட்டு, ஆக. 9: செங்கல்பட்டில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டன.

÷செங்கல்பட்டில் கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸôர் உதவியுடன் சுமார் 1 கி.மீ. தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதற்குப் பிறகு பணிகள் நிறுத்தப்பட்டன.

÷இந்நிலையில் நகராட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.÷ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள வேதா சிக்கன் சென்டர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு தனது ஆக்கிரமிப்பை அகற்றும்படி வேதா சிக்கன் சென்டர் உரிமையாளர் முத்து வேதபுரி கூச்சலிட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார்.

÷அவரை போலீஸôர் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவரது கடை அகற்றப்பட்டது

 

காமன்வெல்த் போட்டிக்காக நடைபாதை உணவு கடைகள் அகற்றம்

Print PDF

தினகரன் 10.08.2010

காமன்வெல்த் போட்டிக்காக நடைபாதை உணவு கடைகள் அகற்றம்

புதுடெல்லி, ஆக. 10: மாநகராட்சி எல்லைக்குள் நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள உணவுக் கடைகள் அகற்றப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி என்.கே.யாதவ் கூறியதாவது:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக நகரை அழகுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. தெருக்களில் குப்பை சேராமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன் முதல் நடவடிக்கையாக தெருவோர காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. அடுத்த நடவடிக்கையாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள உணவுக் கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விளையாட்டு மைதானங்களை சுற்றிலும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள உணவுக் கடைகள்(கையேந்தி பவன்) அகற்றப்படும். அதேபோல நகரின் மார்க்கெட் பகுதிகளில் உள்ள உணவு கடைகளும் அகற்றப்படும்.

இப்போது நடைபாதைகளில் இயங்கும் 5 முதல் 10 சதவீத உணவுக் கடைகள் மட்டுமே அனுமதி பெற்றவை. மற்ற உணவு கடைகள் எல்லாம் ஆக்கிரமிப்பு கடைகள்தான். இவை அனைத்தும் விரைவில் அகற்றப்படும். இவ்வாறு யாதவ் கூறினார்.

மக்கள் தொடர்பு இயக்குநர் தீப் மாத்தூர் கூறுகையில், "கடைகளை அகற்றினாலும் ஒருவாரத்தில் அதே இடத்தில் அந்த கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி விடுகின்றன. அப்படி நடக்காமல் போலீசார்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதற்கிடையில் நடைபாதை உணவுக் கடைகளை அகற்ற அந்த பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி வசந்த் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா பன்சால் கூறுகையில், "தெருவோர கையேந்தி பவன்களில் விற்கப்படும் பேல் பூரி, கோல் கப்பா போன்ற சில குறிப்பிட்ட வகைகளை விரும்பி சாப்பிடுகிறவர்கள் டெல்லியில்தான் அதிகம். இந்த கடைகளை அகற்றுவதால் அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மேலும் நகரை அழகுபடுத்துகிறோம் என்று கூறிக் கொண்டு ஏழை எளிய வியாபாரிகளின் வருமானத்தில் கைவைக்கக் கூடாது" என்றார்.

நடைபாதைகளில் வைத்திருக்கும் துணிக்கடைகள், பான் ஷாப், செருப்பு தைக்கும் கடை போன்ற கடைகளையும் அகற்ற மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

Last Updated on Tuesday, 10 August 2010 06:39
 

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 09.08.2010

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம், ஆக. 9: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற பலரும் கோரிக்கை விடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் சிதம்பரத்தில் ஆட்சியர் சீத்தாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் சிதம்பரம் நகர அபிவிருத்தி குழு அமைக்கப்பட்டது. ரூ 4 கோடி செலவில் நகரில் வளர்ச்சி பணிகளை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களை ஆய்வு செய்த ஆட்சியர் சீத்தாராமன், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதனையடுத்து சில வியா£பாரிகள் தங்களது கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். இந்நிலையில் சிதம்பரம் நகரின் முக்கிய வீதியான மேலவீதியில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

நகராட்சி ஆணையாளர் மாரியப்பன்(பொ), போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன்(பொ) மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடைகளின் முன்பு போடப்பட்டிருந்த கொட்டகைகள், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கம்பங்கள் உள்ளிட்டவை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. சிதம்பரம் தாசில்தார் காமராஜ் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நேரடியாக பார்வையிட்டார். நகரின் முக்கிய வீதியான மேலவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அந்த வீதி அழகாக காட்சி அளித்தது. மேலும் நடைபாதைகளில் சிரமமின்றி நடந்து செல்லலாம் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

 


Page 77 of 204