Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள்அகற்றம் தடையின்றி போக்குவரத்து பொதுமக்கள் மகிழ்ச்சி

Print PDF

தினகரன் 09.08.2010

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள்அகற்றம் தடையின்றி போக்குவரத்து பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம், ஆக. 9: விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் தடையின்றி போக்குவரத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு & ரயில்வே மேம்பாலம் வரை நேருஜி வீதியில் நீடித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பின்னர் இறுதி முடிவு எடுக்கப்பட்டு பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 1ம் தேதி துவங்கியது. காந்தி சிலை & மாதா கோவில் பேருந்து நிறுத்தம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அரசியல் கட்சிகள் கொடி கம்பங்கள், பயன்பாடின்றி கிடந்த தொலைத் தொடர்பு துறை கம்பங்கள் ஆகியவை அடியோடு அகற்றப்பட்டது.

நான்குமுனை சந்திப்பு & காந்தி சிலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 6ம் தேதி (நேற்று முன் தினம்) வரை கெடு விதிக்கப்பட்டது. வியாபாரிகள் பலர் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்பு களை அகற்றி கொண்டனர்.

இரு பெண் அதிகாரிகள் தலைமையில் நான்குமுனை சந்திப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இரண்டாம் கட்டமாக நேற்று காலை துவங்கியது. வருவாய்த்துறை, நகராட்சி, காவல்துறையினர் துணையாக இருந்தனர். விளம்பர பலகைகள், சாலையில் போடப்பட்டிருந்த சிமெண்ட் தளங்கள் ஆகியவை நகராட்சி பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இந்நிலையில் பொக்லைன் இயந்திரம் காலை 10 மணியளவில் திடீரென பழுதானது. பின்னர் பழுது பார்க்க கொண்டு செல்லப்பட்டது. பொக்லைன் இயந்திரம் இல்லாததால் பணிகள் பாதித்தது. மாற்று பொக்லைன் இயந்திரம் வரவழைக்கும் முயற்சியில் பெண் அதிகாரிகள் ஈடுபட்டும் பலனில்லை. பழுது சரிபார்க்கப்பட்டதும் நகராட்சி பொக்லைன் இயந்திரம் 11.45 மணிக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மாற்று பொக்லைன் இயந்திரமும் வந்தது.

2 மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது. பின்னர் 2 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மண்மேடு கொண்டு மேடை அமைத்திருந்த நடைபாதை பழக்கடைகளும் அகற்றப்பட்டன. அரசியல் கட்சி, சங்க கொடி கம்பங்கள் அடியோடு சாய்க்கப்பட்டது.

முழுமை பெறுமா? மக்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரம் மக்கள் கூறுகையில், நீண்ட இழுபறிக்கு பிறகு நேருஜி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதோ அந்த நோக்கம் முழுமை பெற வேண்டும். அவ்வாறு முழுமை பெறுமா? அல்லது இல்லையா? என்பது மாவட்ட நிர்வாகம் கையில் உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் நேருஜி சாலை விசாலமாக காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து எளிதாக செல்லும். இந்த நிலை நீடிக்க வேண்டும் என்றால் ஆக்கிரமிப்புகள் மீண்டும் தலைதூக்க விடக்கூடாது. இல்லையென்றால் தற்போது நடந்துள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கண் துடைப்பு காட்சியாக அமைந்துவிடும் என்றனர்.

 

அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு

Print PDF

தினமலர் 09.08.2010

அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் எந்தவித வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் கடைக்காரர்கள் தங்கள் "வசதி' மற்றும் செல்வாக் கிற்கு ஏற்ப நகராட்சி அனுமதித்துள்ள இடத்தை விட கூடுதலாக இரண்டு அல்லது மூன்று அடி வரை நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை நீட்டித் துள்ளனர். நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடை போட்டுள்ளனர். கடைக்காரர்கள் போட்டுள்ள மேற்கூரையின் கீழ் பொதுமக்கள் வெயிலுக்கு ஒதுக்கினால் விரட்டி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வெயிலில் காத்திருந்து தான் பஸ் ஏற வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. நகராட்சி அதிகாரிகள் பேருக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வந்து செல்கின்றனர்.மேலும், பொதுமக்கள் உட்கார இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பஸ்சிற்காக நின்று கொண்டே காத்து கிடக்க வேண்டியுள்ளது. இங்குள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லை. இலவச கழிப்பறை சுகாதாரக்கேடாக உள்ளது. இரவில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. பஸ் ஸ்டாண்ட் வடக்கு பகுதி இருட்டாக இருப்பதால் "பார்' ஆக செயல்படுகிறது. பல வகைகளில் பொதுமக்களை பாதிக்கும் வகையிலேயே உள்ள பஸ் ஸ்டாண்ட் பஸ்கள் நிறுத்தும் இடமாகத்தான் செயல்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

 

சாம்ராஜ் நகரில் சொந்த கடையில் ஆக்கிரமிப்பை அகற்றிய நகராட்சி தலைவர்

Print PDF

தினகரன் 09.08.2010

சாம்ராஜ் நகரில் சொந்த கடையில் ஆக்கிரமிப்பை அகற்றிய நகராட்சி தலைவர்

கொள்ளேகால், ஆக 9: கொள்ளேகால் நகராட்சி தலைவர் சிவக்குமார் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த கடைப்பகுதியை சாலை பணிக்காக நேற்று சொந்த செலவிலேயே இடித்தார்.

கொள்ளேகால் டவுன் பகுதிக்கு உட்பட்ட சாலைகள் விரிவாக்க பணியானது 17ம் தேதி தொடங்க உள்ளது. கொள்ளேகால் டவுன் பகுதிக்கு உட்பட்ட சாலைபகுதிகளை விரிவாக்கம் செய்ய அரசு ஏற்கனவே முடிவு செய்ததுள்ளது. இதனால் அப்பகுதியில் அரசின் அனுமதி பெறாத வீடுகள் அனைத்தும் இடிக்கபட உள்ளது.

அரசு அனுமதி பெற்ற வீடுகளை இடிக்கப்பட மாட்டாது. இதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 17 வரை உள்ளது என எம்எல்ஏ நஞ்சுண்டசாமி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நகரசபை தலைவர் சிவக்குமார் தனக்கு சொந்தமான டவுன் கடைவீதியிலுள்ள நகைக்கடையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்துவிட்டார்.

ஆனால் பொதுமக்கள் அரசிடம் தெரிவித்திருந்த கோரிக்கை இன்னும் கைவிடவில்லை. எந்த காரணத்தை முன்னிட்டும் எங்கள் இடங்களை விட்டு தர முடியாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

 


Page 78 of 204