Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

அனுமதி பெறாத பஸ் நிறுத்தங்களை அகற்றியது மாநகராட்சி

Print PDF

தினகரன் 03.08.2010

அனுமதி பெறாத பஸ் நிறுத்தங்களை அகற்றியது மாநகராட்சி

சென்னை, ஆக 3: சென்னையில் அனுமதி பெறாத 377 பேருந்து நிறுத்தங்களை சென்னை மாநகராட்சி நேற்று அதிரடியாக அகற்றியது.

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் காம்பவுண்ட் அருகில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அகற்றும் பணியினை சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.

அப்போது, அவர் கூறியதாவது:

முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி சென்னையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளம்பரப்பலகைகள் அகற்றப்பட்டன. துணை முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவுப்படி தலைமைச் செயலகம் எதிரிலுள்ள காமராஜர் சாலையிலும் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சென்னை மாநகராட்சியிடம் 377 பேருந்து நிறுத்தங்களை ஒப்படைந்தது.

சென்னையில் 99 பேருந்து நிறுத்தங்கள் அழகுபடுத்தும் பணிக்காக மாநகராட்சி ஒப்பந்தங்கள் கோரியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 விளம்பர நிறுவனத்தால் 377 அனுமதி பெறாத பேருந்து நிறுத்தங்களுக்கு தடை உத்தரவு வாங்கப்பட்டது. இன்று (நேற்று) மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. தனியாரால் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த 377 அனுமதி பெறாத பேருந்து நிறுத்தங்களை மாநகராட்சி அகற்றியுள்ளது.

தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலை, தாராபூர் டவர் அருகே பல்வேறு இடங்களில் இருந்த அனுமதி பெறாத பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் பேசினார். ஆணையாளர் ராஜேஷ்லக்கானி, மேற்பார்வை பொறியாளர் ஜெ.அட்லி, மண்டல அலுவலர் எதுகுலராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 03.08.2010

நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.கோவில்பட்டி நகராட்சி எல்கைக்குட்பட்ட தெற்குபஜார் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த அப்பகுதி கட்டிட உரிமையாளர்களால் ஆக்கிரமித்து எழுப்பப்பட்டிருந்த தட்டிகள், .சி.ஷீட்டுகள், படிக்கட்டுகள் போன்றவைகள் நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் உத்திரவின்பேரில் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், நகரளவர், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விழுப்புரம் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் முழுமையாக அகற்ற மக்கள் வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 02.08.2010

விழுப்புரம் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் முழுமையாக அகற்ற மக்கள் வலியுறுத்தல்

விழுப்புரம், ஆக. 2:விழுப்புரம் நேருஜி வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து ரயில்வே மேம்பாலம் வரை நேருஜி வீதியில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து மாதா கோயில் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தங்களது பணியை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து துவங்கினர். பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முன் அறிவிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கூடாது என அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாதிட்டனர். ஆனாலும் ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதையடுத்து வியாபாரிகள் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு களை அகற்றிக்கொண்டனர். பலரது கடைகள் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அப்பொருட்கள் லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களுக்கு இதுவரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இம்முறை அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களும் தப்பவில்லை.

விழுப்புரம் நேருஜி வீதியில் பழைய பஸ் நிலையம்&காந்திசிலை வரை ஆக்கிரமிப்புகளால் அதிகஅளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில்தான் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. நேற்றைய ஆக்கிரமிப்பு பணியின்போது இப்பகுதிக்கு யாரும் செல்லவில்லை. பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பாரபட்சம் கூடாது. காந்தி சிலை பகுதியில் நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை போன்று பழைய பேருந்து நிலையம்&காந்தி சிலை வரை உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 


Page 80 of 204