Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆடம்ஸ் நீரூற்று மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் பேனர், தட்டி வைக்க தடை மீறுபவர்களுக்கு அபராதம்

Print PDF

தினகரன் 02.08.2010

ஆடம்ஸ் நீரூற்று மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் பேனர், தட்டி வைக்க தடை மீறுபவர்களுக்கு அபராதம்

ஊட்டி, ஆக. 2: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஆடம்ஸ் நீரூற்று மற்றும் மத்திய பஸ்நிலையம் முன் பேனர் மற் றும் தட்டி வைக்க ஊட்டி நக ராட்சி தடை விதித்துள்ளது.

சுற்றுலா நகரமான ஊட் டிக்கு நாள்தோறும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர். சுற்று லா பயணிகள் கண்டு ரசிக் கும் வகையில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஆடம்ஸ் நீரூற்று அமைக்கப்பட்டுள் ளது. ஆடம்ஸ் நீரூற்றை ரசிக்க பயணிகள் தினமும் ஏராளமானோர் கூடுகின்றனர். மேலும் எஸ்.பி., கலெக்டர் அலுவலகம் செல்லும் சந்திப்பிலும் ஒரு நீரூற்று உள்ளது. இந்த இரு நீரூற்றுக்களுமே ஊட்டி நகரின் அழகை மேம்படுத்துகிறது.

ஊட்டி சர்வதேச சுற்று லா நகரம் என்பதால் பயணி களை கவரும் வகையில் ஊட்டி நகர் சுத்தமாக வைக்கப்படுகிறது. குறிப்பாக தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, தமிழகம் மாளிகை செல்லும் சாலை, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை கள் எப்போதும் நகராட்சி சார்பில் சுத்தமாக வைத்து கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தப்பகுதியில், பல அடி உயரத்திற்கு டிஜிட் டல் பேனர் மற்றும் தட்டி களை வைப்பதால் சுற்றுலா பயணிகள் நீரூற்றின் அழகை கண்டு ரசிக்க முடிவதில்லை. சாலையோரம் வைக்கப்படும் பேனர்களால் சுற்றுலா பயணி கள் முகம் சுளிக்கின்றனர்.

கடந்த மாதம் நடந்த நக ராட்சி கூட்டத்தில் ஊட்டி நகரில் பேனர் மற்றும் தட்டி கள் வைக்க சில குறிப்பட்ட இடங்களை தேர்வு செய்து தர வேண்டும். அந்த இடம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக இருத்தல் கூடாது. மேலும் 5 நாட்களுக்கு மேல் பேனர் மற்றும் தட்டிகள் வைக்க கூடாது என கவுன்சிலர்கள் சிலர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் ஆடம்ஸ் நீரூற்று, மத்திய பஸ் நிலையம் மற்றும் ராஜீவ்காந்தி சிலை அருகே பேனர் மற்றும் தட்டிகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூ றாக தட்டிகள் வைக்கப்பட் டால் ரூ.500 அபராதம் விதிக் கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஊட்டி நகராட்சி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘ஊட்டி நகரை தூய்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நகரில் பல்வேறு இடங் களில் அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர ஸ்தாபனங்கள் நகரில் 5 நாட்களுக்கு மேல் பேனர் மற்றும் தட்டிகள் வைக்க கூடாது. ஆடம்ஸ் நீரூற்று, மத்திய பஸ் நிலையம் மற்றும் ராஜீவ்காந்தி சிலை அருகே தட்டி மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி தட்டி, பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்என்றார்.

Last Updated on Tuesday, 03 August 2010 06:08
 

அனுமதியின்றி கட்டப்பட்ட 4 கட்டிடங்கள் இடிப்பு

Print PDF

தினகரன் 02.08.2010

அனுமதியின்றி கட்டப்பட்ட 4 கட்டிடங்கள் இடிப்பு

நொய்டா, ஆக.2: டெல்லி அருகேயுள்ள தொழில் நகரம் நொய்டா. இந்த நகரத்தில் உள்ள கிரேட் இண்டியா பிளேஸ் மால் என்ற வணிக வளாகத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பொழுது போக்கு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்கா அருகே பல கட்டிடங்கள் அனுமதி இல்லாமலேயே கட்டுப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. அந்த கட்டிடங்களை இடிக்கும்படி ஏற்கனவே நொய்டா வளர்ச்சித் திட்டக் குழு பல முறை உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை வணிக வளாகம் கண்டு கொள்ளவே இல்லை.

இதைத்தொடர்ந்து அந்தக் கட்டிடங்களை நேற்று நொய்டா வளர்ச்சி திட்டக்குழு போலீஸ் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளியது. அனுமதி இன்று கட்டிடம் கட்டியதற்காக நொய்டா வளர்ச்சி திட்டக் குழுமம், யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை..

 

ஜி.எஸ்.டி., சாலையில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 02.08.2010

ஜி.எஸ்.டி., சாலையில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டாம் நாளாக நேற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.இந்த சாலை குறுகிவிட்டதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. இதை தவிர்க்க, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். வருவாய் துறையினர் உதவியுடன் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை அளந்து குறியீடு செய்தனர்.

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 250 கடைகளுக்கு கடந்த மாதம் 21ம் தேதி, "ஆக்கிரமிப்பு அகற்றப் படும்' என நோட்டீஸ் அனுப்பினர். பின், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் லோகநாதன், உதவி கோட்ட பொறியாளர் முகுந்தன், உதவி பொறியாளர் ஆண்ரூஸ் மற்றும் ஊழியர்கள், ஆர்.டி.., லெனின் ஜேக்கப், தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள், போலீஸ் ஏ.எஸ்.பி., சேவியர் தன்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார், நகராட்சி ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்களுடன் சாலைக்கு வந்தனர்.மின் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கட்டடங்களின் மின் இணைப்புகளை துண்டித்தனர். அதன்பின், ஜே.சி.பி., மூலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து எதிர்புறத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.வியாபாரிகள், கடைகளில் இருந்த பொருட்களை அவசரமாக அகற்றினர். சில வியாபாரிகள் கடை முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினர். பஸ் நிலைய நுழைவுப் பகுதியில் நெருக்கடியாக இருந்ததால் அங்கிருந்த இரு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன. அகற்றவேண்டிய ஆக்கிரமிப்புகள் அதிகமிருந்ததால் இரண்டாவது நாளாக நேற்று ஐந்து ஜே.சி.பி., இயந்திரங்கள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்ட பல ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்

 


Page 81 of 204