Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தினமலர் செய்தி எதிரொலி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 30.07.2010

தினமலர் செய்தி எதிரொலி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி நேற்று அகற்றியது.யூ.சி., பள்ளியின் எதிர்பகுதியில் உள்ள நடைபாதைகளில் ஆக்கிரமித்து பூக்கடைகள் அமைக்கப் பட்டிருந்தன. இந்த பகுதி வழியாக ஷாப்பிங் காம்ப் ளக்ஸ் செல்லும் வழியும் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த செய்தி "தினமலர்' இதழில் நேற்று வெளியானது.நேற்று காலை 11 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் ஆக்கிரமித்து அமைத் திருந்த பூக்கடைகளை அகற்றினர். இதனால் இப்பகுதியை பொதுமக்கள் இடையூறுகள் இன்றி பயன்படுத்த துவங்கியுள்ளனர்.கண்காணிப்பு அவசியம்: ஒவ்வொரு முறையும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி சென்றதும், மீண்டும் ஆக்கிரமிப்புகளை துவங்குவது வழக்கம். பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் இது போன்ற ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல், மாநகராட்சி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டுகளை சுற்றியுள்ள ஹையத்கான் ரோடு, டி.பி.கே., ரோடு, மேலவெளிவீதி நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் நடைபாதையை மட்டும் பயன்படுத்தும் நிலையை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் ஏற்படுத்த வேண்டும்.

 

ஸ்டாலின் அறிவுரை திருப்பூரில் பேனர்கள் அகற்றம்

Print PDF

தினமலர் 29.07.2010

ஸ்டாலின் அறிவுரை திருப்பூரில் பேனர்கள் அகற்றம்

திருப்பூர்:துணை முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, திருப்பூரில் 15 நாட்களுக்கு மேலாக வைக்கப்பட்டு வந்த பிளக்ஸ் பேனர்களை தி.மு..,வினர், தாமாக முன்வந்து அகற்றி வருகின்றனர்.வரும் ஆக., 1ல் திருப்பூரில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி, மாவட்ட தி.மு.., மற்றும் மாநகர தி.மு.., சார்பில் 15 நாட்களுக்கு முன்பாகவே, நகரின் பல பகுதிகளிலும், முக்கிய ரோடுகளிலும் தி.மு.., சார்பில் மெகா அளவிலான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன.முதல்வர் கருணாநிதி படங்களுடன் துணை முதல்வரை வாழ்த்தியும், வரவேற்றும் கட்சி நிர்வாகிகளால் வைக்கப்பட்ட இப்பேனர்களால் முக்கிய ரேடுகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக,"தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இத்தகவல் அறிந்த துணை முதல்வர் ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மேயர் செல்வராஜிடம் போனில் பேசியுள்ளார். அப்போது, ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பொதுமக்களுக்கு பாதிப்பின்றி விழா நடத்த றிவுறுத்தியுள்ளார்.இதையடுத்து, நகரில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை கடந்த இரு நாட்களாக, திமுகவினர் தாமாக முன்வந்து அகற்றி வருவதை பொதுமக்கள் வரவேற்று பாராட்டினர். பல இடங்களில் கருப்பு சிவப்பு நிறங்களில் அலங்கார வரவேற்பு வளைவுகளை மட்டும் வைத்துள்ளனர்.

 

துணை முதல்வர் உத்தரவு பிளக்ஸ் பேனர்கள் திடீர் அகற்றம்

Print PDF

தினகரன் 29.07.2010

துணை முதல்வர் உத்தரவு பிளக்ஸ் பேனர்கள் திடீர் அகற்றம்

திருப்பூர், ஜூலை 29: துணை முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவையடுத்து, அவரை வரவேற்று மாநகரில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு அதிரடியாக அகற்றப்பட்டது.

திருப்பூர் எம்.எல்.. கோவிந்தசாமி, தொகுதி மக்களின் சார்பில் பல்வேறு திட்டங்களை திருப்பூர் தொகுதிக்கு வழங்கிய தமிழக அரசுக்கு வரும் 1ம் தேதி பாராட்டு விழா நடத்துகிறார். இந்த விழா மற்றும் திருமண விழா ஆகிய இரு விழாக்களில் பங்கேற்பதற் காக தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் வரும் 1ம் தேதி திருப்பூர் வருகிறார். இதையொட்டி மாநகர் முழுவதும் தி.மு..வினராக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக துணை முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகரில் உள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்ற துணை முதல்வர் மு..ஸ்டாலின் கடந்த 25ம் தேதி தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் செல்வராஜ் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து கடந்த இரு தினங்களாக பிளக்ஸ் போர்டு அகற்றும் பணி மும்முரமாக நடந்தது. அலங்கார வளைவுகளும் கணிசமான அளவு அகற்றப்பட்டது. அமைக்கப்பட்ட சில அலங்கார வளைவுகளிலும் புகைப்படங்களையும், வாசகங்களையும் தவிர்த்து தி.மு..வின் கொடிகளும், உதயசூரியன் சின்னமும் மட்டுமே அமைக்கப்பட்டது.

திருப்பூரில் துணைமுதல்வர் வருகையை முன்னிட்டு திமுக கட்சியினரால் வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்கள் துணை முதல்வரின் உத்தரவையடுத்து நேற்று அகற்றப்பட்டது.

 


Page 83 of 204