Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

Print PDF

தினமலர் 28.07.2010

ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

காரிமங்கலம்: காரிமங்கலத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் ராமசாமி கோவில், பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருவதால் மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்தனர்.நேற்று முன்தினம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சேர்ந்து ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருவதாகவும், அதனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாங்களாக முன் வந்து அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

குள வாய்க்காலில் ஆக்கிரமிப்பு 2 வீடுகள் அதிரடியாக இடிப்பு

Print PDF

தினகரன் 27.07.2010

குள வாய்க்காலில் ஆக்கிரமிப்பு 2 வீடுகள் அதிரடியாக இடிப்பு

கோவை, ஜூலை 27:கோவை நகரில் குளத்து வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 வீடுகள் இடிக்கப்பட்டது.

தடாகம் ரோடு ஏ.கே.எஸ் நகரில் முத்தண்ண குளத்திலிருந்து பொன்னையராஜபுரம் செல்லும் குளத்து வாய்க்காலில் 50க்கும் மேற்பட்ட கான் கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில், 15க்கும் மேற்பட்ட வீடுகள் உருவாகியுள்ளது.

வாய்க்காலை ஒட்டி, மாநகராட்சி குளம், வாய்க்காலுக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக கையகப்படுத்தப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவில் அனுமதி பெறப்பட்டுள்ளது. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி நகர பொறியாளர் கருணாகரன் தலைமையில் அதிகாரிகள் திடீரென கட்டடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். இதில் 1 சென்ட் முதல் 2 சென்ட் வரை வாய்க்கால் பகுதி ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து கட்டடம் இடிக்க உத்தரவிடப்பட்டது. நகரமைப்பு அலுவலர் சவுந்தரராஜன், உதவி அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலையில், வாய்க்கால் கரை மற்றும் மாநகராட்சி பூங் காவை ஒட்டியிருந்த வீட்டு காம்பவுண்ட் சுவர் மற்றும் இன்னொரு வீட்டின் ஒரு பகுதி அதிரடியாக பொக் லைன் மூலமாக நேற்று இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு எல்லைக்குள் உள்ள வீடுகள் இடிக்கப்படும், எல்லை மீறி கட்டடம் கட்டியவர்கள் தாங்களே முன் வந்து கட்டடங்களை இடித்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறு கையில், "கோவை நகர் பகுதியில் ஒரு ஆண்டாக ஆக்கிரமிப்பு கட்டடங் களை கண்டறிந்து உடனடியாக இடித்து வருகி றோம். மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி னால் அதை அனுமதிக்க முடி யாது. நகர் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்கள் தொடர் ந்து இடிக்கப்படும். ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு தொ டர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறோம். முறையாக அனுமதி பெற்று, கட்டவேண்டும் என்றார்.

 

 கோவை காந்திபார்க் ஏ.கே.எஸ் நகரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்தனர்.

 

மார்க்கெட் ஆக்கிரமிப்பு நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன் 27.07.2010

மார்க்கெட் ஆக்கிரமிப்பு நகராட்சி எச்சரிக்கை

வால்பாறை, ஜூலை 27: வால்பாறை புது மார்க்கெட்டில் சாலையோர கடைகள் வைத்திருப்போர் விடுமுறை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகளை பெரிதாக்கி விடுவதால் சந்தைக்கு வருபவர்கள் சாலையில் நடக்க முடியாமலும், இறைச்சி கடைகளுக்கு மற்றும் மீன் கடைகளுக்கு வாகனங்களில் செல்லமுடியாமலும் தவித்து வருகின்றனர்.

மேலும் சாலையின் நடுவே தள்ளுவண்டி கடை களும், நடைபாதை வியாபாரிகளும் ஆக்கிரமித்துவிடுவ தால் சந்தை நாளான ஞாயிற்று கிழமை பொதுமக்கள் கடைகளுக்கு செல்லமுடிவதில்லை. இதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள நிரந்தர கடைகளில் வியா பாரம் பாதிக்கப்படுவதாக மார்க்கெட் வியாபார சங்கத்தினர் புகார் தெரிவித்துவந்தனர். இதையடுத்து, வால் பாறை நகராட்சி செயல் அலுவலர் ராஜ்குமார் மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்போர் மீதும், வழியில் கடை வைப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

 


Page 85 of 204