Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

அமைச்சர் அசோக் உறுதி பெங்களூர் ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன் 26.07.2010

அமைச்சர் அசோக் உறுதி பெங்களூர் ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பெங்களூர், ஜூலை 26:பெங்களூரில் ஏரிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்படும் என்று அமைச்சர் அசோக் தெரிவித்தார்.

பெங்களூர் கமிஷனர் சித்தையா மற்றும் அதிகாரிகளுடன் நேற்று அமைச்சர் அசோக் நகர்வலம் மேற்கொண்டார். நகரிலுள்ள ஏரிகள், கால்வாய்களை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 60 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் ஒரு ஏரியைக் கூட உருவாக்க வில்லை. இருந்த ஏரிகளை கூட சட்ட விரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தான் நகரில் குடிதண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள ஏரி மற்றும் சாக்கடை கால்வாயின் அருகே சட்டவிரோதமாக ஆக்ரமித்திருப்பவர்கள் முக்கிய பிரமுகர் என்றாலும், எந்த கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் என்றாலும் அல்லது தனிப்பட்ட நபர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்ய பின் வாங்காது.

மாநிலம் முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை நீர் செல்லும் கால்வாய்களையும், சாக்கடை கால்வாய்களையும் தூர் வாருவதன் மூலம் குடிநீர் பிரச்னையை வரும் காலங்களில் சமாளிக்கலாம். நகரில் பல்வேறு இடங்களில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஏரி மற்றும் சாக்கடை கால்வாய்களின் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. ஏரிகளை புனரமைப்பதின் மூலம் குடிநீர் பிரச்னையை அதிக அளவில் தீர்க்க முடியும். நகரின் அழகையும் சீர்படுத்த முடியும். இன்னும் 15 நாளில் சாக்கடை கால்வாய்களை சீர்படுத்தி மழைக்காலங்களில் பல பகுதிகள் நீரில் மூழ்குவதை தடுக்கப்படும் என்றார்.

 

ஆக்கிரமிப்பில் இருந்த ரிசர்வ் சைட் மீட்பு

Print PDF

தினமலர் 26.07.2010

ஆக்கிரமிப்பில் இருந்த ரிசர்வ் சைட் மீட்பு

கோவை : செல்வபுரம் சண்முகராஜபுரத்தில் உள்ள ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள "ரிசர்வ் சைட்'டை கோவை மாநகராட்சி மீட்டது.கோவை மாநகராட்சி 56 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் சண்முகராஜபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைப்பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு, முறையான அங்கீகாரத்துடன் மனைகள் விற்கப்பட்டன. இந்த மனைப்பிரிவுக்கான பொது ஒதுக்கீட்டு இடமாக (ரிசர்வ் சைட்) 20 சென்ட் ஒதுக்கப்பட்டது. அங்கு எந்த மேம்பாட்டுப் பணியும் செய்யப்படாததால் காலியிடமாகக் கிடந்தது.

இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றனர். சில ஓட்டு வீடுகளைக் கட்டி, பிறருக்கு வாடகைக்கு கொடுத்தனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து, அப்பகுதியிலுள்ள மக்கள் சார்பில், கோவை மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நடவடிக்கை எடுக்குமாறு நகரமைப்புப் பிரிவுக்கு மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சென்ற குழுவினர், அந்த பகுதி முழுவதையும் நில அளவை செய்து, பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அங்கு காலியாக இருந்த இடங்களில் இருந்த முட்புதர்களை அகற்றினர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில், மக்கள் குடியிருந்ததால் ஒரு நாள் கால அவகாசம் வழங்கினர்.

நாளை( இன்று) மீண்டும் கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, நிலம் சமப்படுத்தப் பட்டு, அவை பூங்காவாகவும், விளையாட்டு திடலாகவும் மாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ""கோவை மாநகராட்சி உதவி நகரமைப்புஅலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,""தற்போது மாநகராட்சி வசம் வந்துள்ள இந்த இடத்தின் இன்றைய மார்க்கெட் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் இருக்கும்,'' என்றார்.

 

உசிலம்பட்டியில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு

Print PDF

மாலை மலர் 23.07.2010

உசிலம்பட்டியில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு

உசிலம்பட்டி, ஜூலை 23- உசிலம்பட்டி சந்தையில் உள்ள தமிழக அரசின் திட்டமான உசிலம்பட்டி உழவர் சந்தையை மேம் படுத்தும் பொருட்டு மாவட்ட கலெக்டரின் அறிவுரை யின்படி உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா, நகராட்சி அலு வலர்கள் மற்றும் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராஜாமணி, உதவி நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமர், கலா மற்றும் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் அப்தாயர், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் உசிலம்பட்டி பஸ் நிலையம் மற்றும் பேரையூர் ரோடு சாலையோர தள்ளுவண்டி கடைகளை அகற்ற கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி காய்கறி கடை வியாபாரிகளை உழவர் சந்தையில் கடை அமைக்க கோரியும் பேச்சுவார்த்தை நடத்தினர். வியாபாரிகள் அனைவரும் கலந்து பேசி முடிவு செய்வதாக அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் உழவர் சந்தையை மேம்படுத்தும் பொருட்டு சாலையோர நடைபாதை காய்கறி கடைகளை அகற்ற முடிவு எடுக்கப்படும் என தெரி வித்து உள்ளனர். தற்போது உழவர் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. கடந்த 2 வருடமாக உழவர் சந்தை இயக்கப்படவில்லை.

 


Page 88 of 204