Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

செங்கல்பட்டில் 31ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

Print PDF

தினமலர் 22.07.2010

செங்கல்பட்டில் 31ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அமைந்துள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கல்பட்டு நகர் வழியே சென்று வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, 15 ஆண்டுகளுக்கு முன்பு பை-பாஸ் சாலை அமைக்கப்பட்டது. பஸ் தவிர லாரி, வேன், கார் என அனைத்து வாகனங்களும் பை-பாஸ் சாலை வழியே சென்றன.

அதன்பின் போக்குவரத்துக் கழகங்கள் பஸ்களை எக்ஸ்பிரஸ், பை-பாஸ் ரைடர் என பெயரை மாற்றி இயக்கி, பஸ்கள் நகருக்குள் வராமல் பை-பாஸ் சாலையிலேயே செல்ல வைத்தன. தற்போது சாதாரண பஸ்கள் மட்டுமே நகருக்குள் வந்து செல்கின்றன.எனினும், பழைய பஸ் நிலையம் முதல், அரசு மருத்துவமனை வரை நெடுஞ்சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ளதால், சாலை குறுகி விட்டது. பஸ் நிலையமும், போக்குவரத்துக் கழக பணிமனையும் அருகருகே இருப்பதால், பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாமலும், பணிமனைக்கு உள்ளே செல்ல முடியாமல்,போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. கடைகளின் ஆக்கிரமிப்பால், சாலை குறுகி பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் சாலையில் நிற்க வேண்டியுள்ளது. எனவே நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானித்தனர். வருவாய் துறையினர் உதவியுடன் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை அளந்து குறியீடு செய்தனர். அதன்பின், ஆக்கிரமிப்பில் உள்ள 250 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

21ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நோட்டீஸ் அனுப்பியதால், நேற்று முன்தினமே வியாபாரிகள் தங்கள் கடைகளின் முன்பிருந்த பந்தல்களை பிரித்தனர்.இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் லோகநாதன், உதவி கோட்டப் பொறியாளர் முகந்தன் ஆகியோர் தாசில்தார் வெங்கடேசன், மின்வாரிய உதவிப் பொறியாளர் மோகன், நகராட்சி கட்டட ஆய்வாளர் வெங்கடேசன், செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியழகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.ஆலோசனையின் போது, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை வரும் 31ம் தேதி அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளின் மின் இணைப்புகளை துண்டிக்கும்படி மின்வாரியத்தினரிடம் தெரிவித்தனர். நகராட்சி சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள பங்குகளை அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதே போல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போலீசாரிடம் தெரிவித்தனர்.

 

கோபியில் வாடகை கார் நிறுத்துமிடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி 21.07.2010

கோபியில் வாடகை கார் நிறுத்துமிடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கோபி, ஜூலை 20: கோபி பஸ் நிலையம் அருகில் வாடகை கார்கள் நிறுத்துமிடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உதவியுடன் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

கோபி பஸ் நிலையம் அருகில் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் செல்லும் இடத்தில் வாடகை கார்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு கார்களை நிறுத்துவதற்கு ஒரு இரும்பு கம்பி போட்டு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதை அமைப்பதற்கு கோபி நகராட்சியிடம் இருந்து அனுமதி பெறவில்லை.

இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது என புகார் கூறி வந்தனர். ஈரோட்டில் நடைபெற்ற குறைதீர் முகாமிலும் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோபி நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வாடகை கார் நிறுத்துமிடத்தில் போடப்பட்டிருந்த பந்தலை நகராட்சி பணியாளர்கள் உதவியுடன், அதிகாரிகள் அகற்றினர்.

பந்தலை பிரிப்பதற்கு டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் பந்தல் அகற்றப்பட்டது. பஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அகலரயில் பாதை பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம் 38 வீடுகள் இடிப்பு

Print PDF

தினகரன் 20.07.2010

அகலரயில் பாதை பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம் 38 வீடுகள் இடிப்பு

திண்டிவனம், ஜூலை 20: திண்டிவனத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் கட்டியிருந்த வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அகற்றப்பட்டது.

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம் வரை 155 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதலாக அகல ரயில்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இப்பணியின் முதற்கட்டமாக இரு வழிப்பாதை அமைப்பதற்கான இடம் சேடன்குட்டையில் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை ஆக்கிரமித்து 38 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு ரயில்வே பாதை வருவதால் அவர்களை காலி செய்யக்கூறியதோடு, மாற்று இடமாக பல்லாங்குப்பம் சாலையில் பாரதிதாசன் பேட்டையில் 36 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் இடம் வழங்கப்படவில்லை.

ஆகையால் அந்த இடத்தை காலிசெய்யும் படி ஒவ்வொருக்கும் ரயில்வே துறையினர் நகராட்சி சார்பில் இருமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் இது வரை அந்த இடத்தை காலி செய்யாததால் ரயில்வே முதன்மை பகுதி பொறியாளர் ஜான்சன், செங்கல்பட்டு ரயில்வே இன்ஸ்பெக்டர் அனில் டேவிட், பகுதி பொறியாளர் நாதன் நாயக் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார், தாசில்தார் வேலாயுதன் பிள்ளை ஆகியோர் முன்னிலையில் மூன்று ஜே.சி.பி மூலம் ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர். அதைத் தொடர்ந்து 38 வீடுகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

 


Page 90 of 204