Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

நட்சத்திர ஓட்டல் ஆக்கிரமித்த 9 கிரவுண்டு நிலம் மீட்பு

Print PDF

தினகரன் 30.06.2010

நட்சத்திர ஓட்டல் ஆக்கிரமித்த 9 கிரவுண்டு நிலம் மீட்பு

சென்னை, ஜூன் 30: நுங்கம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டல் ஆக்கிரமித்திருந்த இடத்தை மாநகராட்சி நேற்று கையகப்படுத்தியது.

நுங்கம்பாக்கத்தில் அண்ணா மேம்பாலம் அருகில் தி பார்க்நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் வளாகத்தின் அருகிலேயே திறந்தவெளி இடம் (.எஸ்.ஆர். நிலம்) பொது பயன்பாட்டிற்காக மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை ஓட்டல் நிர்வாகமே ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவு பெற்றது. இந்த தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி மனுதாக்கல் செய்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சுவரை இடிக்க மாநகராட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வழக்கை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மாலை அந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்று அங்கு பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுற்றுசுவரை இடிக்கும் பணியை மேற்கொண்டனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ஓட்டல் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள சுமார் 9 கிரவுண்டு திறந்தவெளி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றனர்.

 

ஐ.என்.ஏ. மார்க்கெட்டில் 36 கடைகள் தரைமட்டம்

Print PDF

தினகரன் 29.06.2010

.என்.. மார்க்கெட்டில் 36 கடைகள் தரைமட்டம்

புதுடெல்லி, ஜூன் 29: நகரை அழகுப்படுத்தும் பணியின் ஒரு கட்டமாக ஐ.என்.. மார்க்கெட்டில் உள்ள காஷ்மீர் வியாபாரிகளின் 36 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினர்.

டெல்லியில் அக்டோபரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு, நகரை அழகுபடுத்தும் பணிகளை மாநில அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டுள்ளன.

போட்டிகள் நடைபெறும் தியாகராஜா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அழகுப்படுத்தும் பணிகளின் ஒரு கட்டமாக, .என்.. மார்க்கெட்டில் உள்ள 36 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் நேற்று முன்தினம் இடித்து தள்ளினர்.

1990ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்தவர்கள், .என்.. மார்க்கெட்டில் 2001ல் கடைகளை திறந்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

கடையை இடித்ததால் வருத்தத்துடன் காஷ்மீர் வியாபாரி பட் கூறுகையில், "மாநகராட்சி முன்கூட்டியே எந்த நோட்டீசையும் எங்களுக்கு அளிக்காத நிலையில், கடைகளை இடித்து தள்ளியது சட்டவிரோதம். எங்களுக்கு வருமானம் தருவதற்கு இந்த கடை மட்டும்தான் இருந்தது. அதையும் இடித்து தள்ளியதால் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது" என்றார். இன்னொரு வியாபாரி ஷாபாசி கூறுகையில், "தியாகராஜா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுப்படுத்துவதற்காக கடைகளை இடித்ததாக கூறுகிறார்கள். மைதானத்தில் இருந்து நீண்ட தூரத்தில்தான் எங்கள் கடைகள் உள் ளன. உண்மை இப்படியிருக்க, கடைகளை எந்த முன்னறிவிப்புமின்றி இடித்து தள்ளிவிட்டனர். இந்த விஷயத்தை மாநில கவர்னர் தேஜேந்திரா கன்னாவின் கவனத்துக்கு கொண்டு சென்று நியாயம் கேட்போம்" என்றார்.

 

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் திரும்ப இடையூறாக உள்ள கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை

Print PDF

தினகரன் 21.06.2010

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் திரும்ப இடையூறாக உள்ள கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை

வேலூர், ஜூன் 21: வேலூர் புதிய பஸ் நிலைய பின்புற வாயிலில் பஸ்கள் எளிதாக திரும்பிச் செல்ல இடையூறாக உள்ள பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் விரைவில் இடிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் வாயில் அருகே பயன்பாட்டில் இல்லாத சிறிய கட்டிடம் உள்ளது. முன்பு பழச்சாறு தொழிற்சாலை இருந்தபோது இந்த கட்டிடம் காவலாளி அறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களுக்கு இந்த கட்டிடம் இடையூறாக உள்ளதால் சிரமப்பட்டு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே இடையூறாக இருக்கும் இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற கலெக்டர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆனால் இந்த கட்டிடம் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து வேலூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜிடம் கேட்டபோது, ‘பஸ்கள் எளிதாக திரும்பிச் செல்ல பயன்பாட்டில் இல்லாத அந்த கட்டிடத்துக்கு அருகே உள்ள சில மரங்களையும் வெட்ட வேண்டியது உள்ளது. மரங்களை வெட்டி அகற்ற ஏலம் விடப்பட்டு உள்ளது. அதிகாரிகள் அனுமதி அளித்ததும் மரங்களை வெட்டிய பின்னர், விரைவில் அந்த கட்டிடமும் இடிக்கப்படும்என்றார்.

 


Page 91 of 204