Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கோபி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 15.06.2010

கோபி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கோபிசெட்டிபாளையம்: கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்கிரமிப்பு மற்றும் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை நகராட்சி ஊழியர்கள் நேற்று திடீரென அப்புறப்படுத்தினர். ஈரோட்டுக்கு அடுத்தபடியாக கோபி பஸ் ஸ்டாண்டு மாவட்டத்தில் மிகப்பெரிய பஸ் ஸ்டாண்டாக திகழ்கிறது. கல்வி நிறுவனங்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள கோபி நகரைத்தான், சுற்றியுள்ள கிராம மக்கள் அன்றாட தேவைக்கு நாடுகின்றனர்.

புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் கொண்ட கோபிக்கு வெளியூர் பயணிகளும் ஏராளம் வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புக்கு பஞ்சமில்லை. கடைக்காரர்கள் பிளாட்ஃபாரம் வரை தங்கள் பொருட்களை கடை பரப்பி வைத்திருப்பதால், பயணிகள் நிற்கவும், நடமாடவும் முடியாமல் தவிக்கின்றனர். போதாத குறைக்கு கடை உரிமையாளர்கள், கடை பணியாளர்கள் தங்கள் வாகனங்களை பிளாட்ஃபாரத்தில் நிறுத்தி வைத்துக் கொள்கின்றனர். "பஸ் ஸ்டாண்டுக்குள் பெருகி விட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு' நகராட்சி கூட்டங்களில், பல்வேறு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.

பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள், நகராட்சி நிர்வாகம் போட்ட எல்லை கோட்டைக் தாண்டி கடைகளை வைத்துள்ளதாகவும், சில கடைகளை சேர்ந்த ஊழியர்கள், பஸ்ஸுக்காக காத்திருக்கும் பொதுமக்களை நிற்க விடாமல் விரட்டுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நேற்று காலை 11.15 மணிக்கு கோபி நகராட்சி கமிஷனர் குப்பமுத்து, தாசில்தார் பன்னீர் செல்வம், சுகாதார அலுவலர் ஆறுமுகம், ஆர்.., வெங்கடேஷ் ஆகியோர் கோபி பஸ் ஸ்டாண்ட்டுக்கு திடீர் "விசிட்' அடித்தனர்.

அப்போது, நகராட்சி நிர்வாகம் போட்டிருந்த எல்லைக் கோட்டுக்கு வெளியே இருந்த கடைகளை, தள்ளி வைக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். சில கடைகளில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பொருட்களை நகராட்சி ஊழியர்களே கடைக்குள் தள்ளி வைத்தனர். பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும், நகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் அள்ளிச் சென்றனர். கோபி பஸ் ஸ்டாண்டில் ஒரு மணி நேரம் பரபரப்பாக இருந்தது.

 

ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிரடியாக அகற்றம்

Print PDF

தினமலர் 15.06.2010

ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிரடியாக அகற்றம்

கொரட்டூர் : குளம், மயான புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை அம்பத்தூர் நகராட்சி அதிகாரிகள், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றினர்.

அம்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட, பாடி ரவுண்டானா அருகில் குளத்தை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டபத்தின் காம்பவுன்ட் சுவர் கட்டப்பட்டுள் ளது.அதே போல், திருமண மண்டபத்தின் பின்புறம், மயான புறம்போக்கு நிலத்தில் மூன்று கடைகள் கட்டப்பட்டிருந்தன.இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை, அம்பத்தூர் நகராட்சி ஆணையர் ஆஷிஷ் குமார் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் நேற்று அகற்றினர். ஜே.சி.பி., இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கடைகள் இடிக்கப்பட்டன.ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக, அம்பத்தூர் உதவிக் கமிஷனர் குமரவேலு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

 

திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

Print PDF

தினமணி 11.06.2010

திருத்தங்கலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

சிவகாசி,ஜூன்10: சிவகாசி வட்டம், திருத்தங்கல் மூன்றாம் நிலை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி செயல் அலுவலர் எஸ். கௌதம் வியாழக்கிழமை கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

திருத்தங்கல்-ஆலமரத்துப்பட்டி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே எடுக்கப்பட்டு விட்டது. விரைவில் அப்பகுதி ஆக்கிரமிபுக்கள் அகற்றப்படும் என்றார். வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் 6 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாள்களில் இவை செயல்படத் துவங்கும்.

7-வது வார்டு வேலவன் நகர், 13-வது வார்டு கே.கே .நகர், 8-வது வார்டு கண்ணகிகாலனி, 4-வது வார்டு முத்துமாரி நகர், 118-வது வார்டு சுக்கிரவார்பட்டி சாலை மற்றும் 21-வது வார்டு ஆகிய பகுதிகளில் இவை அமைக்கப்பட்டுள்ளது. திருத்தங்கல் நகராட்சிக்கு மானூர் குடிநீர் பத்து நாளைக்கு ஒருமுறை 16 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது.

ஆணைகுட்டம், பெரியகுளம் கண்மாய், தாழோடை ஆகியவைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு 12 வார்டுகளுக்கும் தினசரி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 9-வது வார்டுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்கப்படுகிறது.

குப்பைகளை கொட்டுவதற்குஇடமில்லாத நிலை உள்ளது. குப்பைகளை கொட்டுவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நகரை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றார் அவர்.

 


Page 95 of 204