Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்; 25 ஆண்டுகாலமாக இருந்த காம்பளக்ஸ் இடிப்பு!

Print PDF

தினமலர் 11.06.2010

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்; 25 ஆண்டுகாலமாக இருந்த காம்பளக்ஸ் இடிப்பு!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 25 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த கமர்சியல் காம்பளக்ஸ் கட்டடத்தை அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஆக்கிரமித்த பகுதிகளில் மரகன்றுகளை நடுவதற்கும் அதிகாரிகள் முன்வரவேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கொண்டே வருவதால் போக்குவரத்து இடையூறு அதிகமாக ஏற்படுவதுடன் விபத்துகளும் அதிகரித்துவிட்டது. இதை தடுக்கும் வகையில் கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின்படி நேற்று ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதாக அறிவித்ததலிருந்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை பாதுகாத்து கொள்வதில் பல்வேறு வழிகளை கையாள துவங்கினர். சில ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் நாடி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முட்டுகட்டை கொடுத்து வந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி தள்ளிகொண்டே போனது. இந்நிலையில் நேற்று கலெக்டரின் அதிரடி உத்தரவால் நெடுஞ்சாலை துறையினர், வருவாய்துறையினர், ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் பட்டணம்காத்தான் தேசிய நெடுஞ்சாலை கிழக்கு கடற்கரை சாலை துவங்கும் இடம் முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர். ஆக்கிரமிப்பு பணிகள் துவங்கியதை அறிந்தவுடன் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள கடைகள், ஓட்டல்கள், கமர்சியல் காம்ளஸ்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கூரைகளை வேகமாக தாங்களே அகற்றி மறைவான இடத்தில் வைத்து கொண்டனர். பாரதிநகரில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் 25 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த எட்டு கடைகள் கொண்ட மாடியுடன் இருந்த கமர்சியல் காம்பளக்சை புல்டோசர் மூலம் இடித்து அகற்றினர். 25 ஆண்டுகளாக கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து கொண்டிருந்த கட்டடம் இதுவரை அகற்றப்படாமல் இருந்தது குறித்து பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும் தொடர்ந்து நடக்கும் ஆக்கிரமிப்பு பணி பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு மீண்டும் ஏற்படும் என சந்தேகப்படும் இடங்களில் மரகன்றுகளை நட மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.

 

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 11.06.2010

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை : மதுரை வெங்கலக்கடைத் தெரு 1 முதல் 5 வரை சாலையோரங்களில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தன. வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் வாசனை திரவியங்கள் விற்பவர்கள், சாலையை ஆக்கிரமித்திருந்தனர். இது பற்றி மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.நேற்று நகரமைப்பு அலுவலர்கள் நல்லதம்பி, ஜாகீர் உசேன் மற்றும் ஊழியர்கள், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பொருட்கள் மாநகராட்சி ஸ்டோர் ரூமில் ஒப்படைக்கப் பட்டன.

 

தூத்துக்குடியில் போக்குவரத்திற்கு இடையூறு 18 டிஜிட்டல் போர்டுகள் ஜெசிபி மூலம் அகற்றம்

Print PDF

தினமலர் 11.06.2010

தூத்துக்குடியில் போக்குவரத்திற்கு இடையூறு 18 டிஜிட்டல் போர்டுகள் ஜெசிபி மூலம் அகற்றம்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று அனுமதி இல்லாமல் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டன. மொத்தம் 18 போர்டுகள் ஜெ.சி.பி உதவியுடன் எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் போக்குவரத்து இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளை அகற்றி கொண்டே இருந்தால் தான் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்று கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்துநேற்று கமிஷனர் குபேந்திரன் உத்தரவின் பேரில் நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன் மற்றும் நகரமைப்பு ஊழியர்கள், சுகாதார பிரிவு ஊழியர்கள் இணைந்து ஜெ.சி.பி உதவியுடன் பாளை.ரோடு, கிரேட்காட்டன் ரோடு, டபுள்யூ சி.ஜி.ரோடு ஆகிய இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகளை அகற்றினர்.

சில நாட்களாக தொடர்ந்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் போர்டு, கமர்சியல் டிஜிட்டல் போர்டு உள்ளிட்ட மொத்தம் 18 டிஜிட்டல் போர்டுகளை அகற்றினர். ஜெ.சி.பி மூலம் அப்படியே அலாக்காக பிடுங்கப்பட்ட போர்டுகள் மாநகராட்சி லாரியில் கொண்டு செல்லப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் போடப்பட்டது.

 


Page 96 of 204