Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்

Print PDF

தினகரன் 08.06.2010

மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்

புதுடெல்லி, ஜூன் 8: டெல்லியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கே.எஸ். மெஹ்ரா கூறினார்.

இதுபற்றி நிருபர்களிடம் மெஹ்ரா கூறியதாவது: டெல்லியில் அக்டோபர் 3 முதல் 14 ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. அதற்காக நகரை அழகுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. சாலையோரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த கடைகள் நகரின் பாதுகாப்புக்கு நல்லது அல்ல.

போட்டியின்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் நகரில் கூடுவார்கள். அப்போது போக்குவரத்துக்கும் இவைகள் இடையூறாக இருக்கும். எனவே சாலைகளில் உள்ள காய்கறி கடைகள், காலணி பழுதுபார்க்கும் கடைகள், துணிகளுக்கு இஸ்திரி போடும் கடைகள் மற்றும் பான்வாலாக்கள் வைத்துள்ள கடைகள் எல்லாவற்றையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மெஹ்ரா கூறினார்.

 

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 08.06.2010.

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலம், ஜூன் 7: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் சனிக்கிழமை அகற்றினர்.

÷விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுவதாக நகர்மன்ற தலைவர் முருகனுக்கு புகார்கள் வந்தன.

÷இதைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் முருகன், நகர்மன்ற உறுப்பினர் அரங்க.பாலகிருஷ்ணன், துப்புரவு அலுவலர் பரமசிவம், மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை சென்றனர்.

÷அங்கிருந்த நடைபாதை கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்தினர். மேலும் பஸ் நிலையத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க நகராட்சி ஊழியர்கள் இருவர் கண்காணித்து வருமாறு நகர்மன்றத் தலைவர் அறிவுறுத்தினார்.

 

சாலையோர கோயில்களை அகற்றிய மாநகராட்சியினர்

Print PDF

தினமணி 08.06.2010

சாலையோர கோயில்களை அகற்றிய மாநகராட்சியினர்

திருச்சி, ஜூன் 7: திருச்சி மேலரண் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 3 கோயில்களை மாநகராட்சி அலுவலர்கள் திங்கள்கிழமை அகற்றினர்.

திருச்சி மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்துச் சாலைகளும் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில், மேலரண் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மூக்காரப் பிள்ளையார் கோயில், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் மற்றும் தனியார் நிர்வாகத்திலுள்ள வீரராஜ்ய பிள்ளையார் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் இடித்து அகற்றப்பட்டன.

இந்தப் பணியில் மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், குமரேசன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 4 பொக்லைன்கள் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டன. பாதுகாப்புப் பணியில் மாநகர துணை ஆணையர் ரூபேஷ்குமார் மீனா தலைமையில் ஏராளமான போலீஸôர் ஈடுபட்டிருந்தனர். மாநகரிலுள்ள அனைத்துச் சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Page 98 of 204