Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்கிறது

Print PDF

தினமலர் 08.06.2010

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்கிறது

தூத்துக்குடி,: தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஒரே நாளில் 15 வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த பணிகள் தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிக்காக தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இரண்டாம் நாளாக நேற்று மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் உத்தரவின் பேரில் பொறியாளர் ராஜகோபாலன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.ஜெ.சி.பி உதவியுடன் மக்கள் எதிர்ப்பு இல்லாமல் சுறுசுறுப்பாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் 15 வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. முதல் நாளில் 30 ஆக்கிரமிப்புகளும், நேற்று 15 ஆக்கிரமிப்புகளும் சேர்த்து மொத்தம் 45 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன.மொத்தம் உள்ள 150 ஆக்கிரமிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு அகற்றப்பட்டு விட்டன. அண்ணாநகர் 6வது தெருவரை உள்ள மீதமுள்ள நூறு ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து அகற்றப்படும் என்று மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் தெரிவித்தார்.

 

பீர்க்கன்காரணை பேரூராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Print PDF

தினகரன் 07.06.2010

பீர்க்கன்காரணை பேரூராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தாம்பரம், ஜூன் 7: பீர்க்கன்காரணை பேரூராட்சியில், மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.21.20 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்துக்கு, கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க 20 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் பணி துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலத்தை மீட்டு தடும்படி, பேரூராட்சி சார்பில் தாம்பரம் தாலுகா அலுவலகத்துக்கு மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தாம்பரம் வருவாய் ஆய்வாளர் தலைமையிலும், பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிவசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இடத்துக்கு சென்றனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை மீட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 லட்சம். நிலம் மீட்கப்பட்டதால், பாதாள சாக்கடை பணிகள் விரைவில் தொடங்கும் என பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

 

தினகரன் செய்தி எதிரொலி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினகரன் 03.06.2010

தினகரன் செய்தி எதிரொலி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கரூர், ஜூன் 3: தினகரன் செய்தி எதிரொலியால் நகராட்சி அதிகாரிகள் கரூர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

கரூர் பஸ்நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் நெரிசல் அதிகமாகி பய ணிகள் நிற்க கூட இட மின்றி அவதிப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும், நிற்பதற்கும், அமருவதற்கும் வசதி செய்ய வேண் டும் என பயணிகள் கோரி க்கை விடுத்தனர்.

இந்நிலையில் கரூர் நகராட்சி ஆணையராக உமாபதி பொறுப்பேற்றார். இவர் கடந்த 15நாட்களுக்கு முன் னர் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். பயணிகளுக்கான இடத் தில் கடை வைத்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரி க்கை விடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்க தொடங்கின. இதுகுறித்த செய்தி கடந்த 1ம்தேதி தினகரனில் வெளியானது.

இதையடுத்து நகரமைப்பு அலுவலர் ஜானகிராமன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று பஸ்நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் நடக்கும் பாதை விசாலமாக மாற்றப்பட்டது.

பஸ்நிலையத்திற்குள் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள துண்டுபிரசுரங்களை அகற்றி சுகாதார பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

அனுமதியற்ற தட்டிபோர்டுகளை அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நடைபாதையில் வியாபாரம் செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் உமாபதி தெரிவித்தார்.

 


Page 99 of 204