Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பு அகற்றம் 3 நாட்கள் தொடரும்:கலெக்டர் அறிவிப்பு

Print PDF

தினகரன்    27.05.2010

ஆக்கிரமிப்பு அகற்றம் 3 நாட்கள் தொடரும்:கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சையில் ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டது. தஞ்சை நகரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ரோடுகளில் இருந்து ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டன. கடந்த மூன்று நாட்களுக்கு முன் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தஞ்சை நகரப்பகுதியில் உள்ள நகராட்சி ரோடுகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் உள்ள ஆக்ரமிப்புக்களை கடைக்காரர்கள் மற்றும் வீடு கட்டி உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும், என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மேலும், மே 26ம் தேதிக்குள் அவ்வாறு அகற்றாமல் போனால், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்ரமிப்புக்களை அகற்றுவதற்கான கட்டணம் தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும், என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி தஞ்சை நகரில் பல இடங்களில் ஆக்ரமித்து வைத்திருந்த ஆக்ரமிப்புக்களை கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றினர். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ஜெயராமன், சாலைகள் ஆய்வாளர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டது. நேற்று காலை முதல் தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து ரயிலடி செல்லும் ரோடு, திருச்சி ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் வரை செல்லும் ரோடுகளில் மூன்று நாட்களுக்கு ஆக்ரமிப்புக்கள் அகற்றப்படுகிறது.


Last Updated on Thursday, 27 May 2010 06:01
 

பட்டுக்கோட்டையில் பிளக்ஸ், விளம்பர போர்டுகள் அகற்றம்

Print PDF

தினகரன்        26.05.2010

பட்டுக்கோட்டையில் பிளக்ஸ், விளம்பர போர்டுகள் அகற்றம்

பட்டுக்கோட்டை,மே.26: பட்டுக்கோட்டையில் 110 விளம்பர போர்டுகள், பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன.

பட்டுக்கோட்டையில் நகராட்சிப் பகுதிகளில் விளம்பரம் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது தொடர்பாக 22ம் தேதி கலெக்டர் சண்முகம் திடீர் ஆய்வு செய்தார். நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள போர்டுகளை 24&ம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 25&ம் தேதி அவை அகற்றப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி நேற்று நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் காலை முதல் மாலை வரை விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டன. பஸ் நிலையப் பகுதி, மணிக்கூண்டு, அறந்தாங்கிரோடு முக்கம், அண்ணாசிலை பகுதி, பாளையம், ஆலடிக்குமுளை மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் அனுமதியற்ற, காலங்கடந்த விளம்பர போர்டு மற்றும் பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன. இதில் பெரிய விளம்பர போர்டுகள் 10, சிறிய பிளக்ஸ் போர்டுகள் 43, போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 57 பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன.

 

புனேயில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 543 வழிபாட்டு தலங்களை இடிக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன் 26.05.2010

புனேயில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 543 வழிபாட்டு தலங்களை இடிக்க மாநகராட்சி முடிவு

புனே,மே 26: புனேயில் சட்ட விரோதமாக கட்டப் பட்டுள்ள வழிபாட்டு தலங்களை இடிக்க மாந கராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புனேயில் சட்டவிரோத வழிபாட்டு தலங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். இதில் 543 சட்டவிரோத வழிபாட்டு தலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவற்றை அகற் றுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் மகேஷ், போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங்குடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் , இந்த சட்ட விரோத வழிபாட்டு தலங்களை இடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மாநகராட்சி சட்டவிரோத கட்டிடங் களை இடிக்கும் பொறுப்பு சிறப்பு அதிகாரி ரமேஷிடம் கேட்டதற்கு, "சட்டவிரோத வழிபாட்டு தலங்களை இடிப்பது தொடர்பாக போ லீஸ் இணை கமிஷனருடன் பேசினேன்.

இவற்றை அகற்ற போலீ சாரின் பாதுகாப்பு மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆரம்பத்தில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூ றாக இருக்கும் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படும். பின்னர் படிப்படியாக மற்ற வழிபாட்டு தலங்களும் இடிக்கப்படும்.

இது தவிர சாலை யோரத்தில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய் யப்படும் உணவு கடைகள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கடைகள் உரிமம் பெறாமல் செயல்படுகின்றன.

அதோடு அவை பொது மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின் றன. இது தொடர்பாக அனைத்து வார்டுகளிலும் தெரிவித்து விட்டோம். நாளையில் இருந்து அவற் றிற்கு எதிராக நடவடிக்கை தொடங்கும்"என்றார்.

 


Page 103 of 204