Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்ட பூங்கா

Print PDF

தினமலர்    24.05.2010

ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்ட பூங்கா

போடி: போடி சூர்யா நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்காவை தனிநபர்கள் ஆக்ரமிக்க முயன்ற போது, போடி நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தி தளவாட பொருட்களை பறிமுதல் செய்தது. போடி பரமசிவன் கோயில் ரோட்டில் அமைந் துள்ள சூர்யா நகரில் நகராட்சிக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா உள்ளது.

பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் தாமதம் செய்து வந்த நிலையில் தனிநபர்கள் சிலர் குடிசைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். நகராட்சிகமிஷனர் சரவணக்குமார் தலைமையில் பணியாளர்கள் சென்று ஆக்கிரமிப்பை தடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டு வந்த தளவாடப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Last Updated on Monday, 24 May 2010 05:48
 

தங்க சாலையில் பரபரப்பு அனுமதியின்றி கட்டப்பட்ட 40 கடைகள் தரைமட்டம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன்    21.05.2010

தங்க சாலையில் பரபரப்பு அனுமதியின்றி கட்டப்பட்ட 40 கடைகள் தரைமட்டம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

தண்டையார்பேட்டை, மே 21: தங்கசாலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 40 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

ஏழுகிணறு தங்கசாலை தெருவில் 200க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் வரைமுறையின்றி இருந்தன. இதனால், பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதில், உயர் நீதிமன்றமும், மாநகராட்சியும் தலையிட்டு, நடைபாதை வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியது.

இந்நிலையில், அப்பகுதி நடைபாதை வியாபாரிகள் பலரும் தற்காலிக கடைகளை அமைக்காமல், சுவர் எழுப்பி நிரந்தர கடைகளைப் போல கட்டினர். இதற்கு மாநகராட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் சுமார் 40 கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து கடைகள் கட்டும் பணியும் நடந்து வந்தது.

இதனால், அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரங்களுடன் தங்கசாலை பகுதிக்கு நேற்று வந்தனர். கடைகளை இடிக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த ஏழுகிணறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

வியாபாரிகளிடம் சமரசம் பேசி அமைதிபடுத்தினர். பின்னர், அனுமதியின்றி கட்டப்பட்ட 40 கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

 

ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அகற்றம்

Print PDF

தினமலர்    21.05.2010

ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அகற்றம்

திருச்சி: திருவானைக்காவலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

திருச்சி, திருவானைக்காவல், நெல்சன் சாலையில் சிலர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி 20 ஆண்டுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றம்படி மாநகராட்சியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வீடுகளை அகற்றாமல் இருந்தனர். இதையடுத்து, நேற்று காலை மாநகராட்சி செயற்பொறியாளர் அருணாச்சலம் தலைமையில், ஸ்ரீரங்கம் உதவி செயற்பொறியாளர் நாதன், இளநிலைபொறியாளர்கள் லட்சுமணன், மூர்த்தி, வேல்முருகன், ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நெல்சன் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டன. பிரச்னைகளை தவிர்க்க ஸ்ரீரங்கம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 


Page 105 of 204