Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஐந்தருவி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

Print PDF

தினகரன்        18.05.2010

ஐந்தருவி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

தென்காசி, மே. 18: ஐந்தருவி பகுதியில் ஆக்கிரமிப்பு கடை கள் அகற்றப்பட்டன. அப் போது வியாபாரிகள்&அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

ஐந்தருவியில் பெண்கள் குளிக்கச்செல்லும் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளின் உரிமைதொடர்பாக குற்றாலநாதர் கோயில் மற்றும் பேரூ ராட்சி நிர்வாகத்திற்கு இடை யே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சாதகமாக இதில் தீர்ப்பு கிடைத்தது. இதனையடுத்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜையாஅங்கு வைக்கப்பட் டுள்ள கடைகளை 16ம் தேதிக் குள் காலி செய்யுமாறு அதன் உரிமையாளர்களுக்கு 2 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை.

இதனையடுத்து நேற்று தென்காசி கோட்டாட்சியர் மூர்த்தி, டி.எஸ்.பி. ஸ்டாலின், குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜையா ஆகியோர் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அங்கு திரண்டு கடை உரிமையாளர்கள் மற் றும் அவர்களது வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் எங்களுக்கு தாமதமாக நோட்டீஸ் கிடைத்தது. இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். குறைந்த கால அவகாசத்தில் கடைகளை அகற்றக்கூடாது என்று கூறி ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக கடந்த பிப்ரவரி மாதமே தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே சட்டப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம் என்றார். இதையடுத்து கோட்டாட்சியர் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற இடையூறு விளைவிக்க கூடாது. இது தொடர்பாக உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளை முதல் டிஜிட்டல் போர்டு அகற்றம்

Print PDF

தினமலர்           18.05.2010

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளை முதல் டிஜிட்டல் போர்டு அகற்றம்

தூத்துக்குடி, : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் இரண்டு நாட்கள் அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகள் முழுமையாக அகற்றப்படும் என்றும், தூத்துக்குடி ஊராட்சி பகுதியில் இன்று டிஜிட்டல் போர்டுகள் கலெக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து நேற்று மாலை அவர் வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில் கூறியிருப்பதாவது;தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகளில் பேனர்கள், டிஜிட்டல் போர்டுகள், விளம்பர போர்டுகள் அனுமதியின்றி வைத்து இருப்பதால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதனை தவிர்கும் நோக்குடன் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் போன்றவற்றை நாளை நாளை மறுநாள் ஆகிய நாட்களில் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் அகற்றப்பட உள்ளது.தூத்துக்குடி நகர்புறம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை மற்றும் டிஜிட்டல் போர்டுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை மூலம் அகற்றப்படுவதுடன், அதற்கான செலவு தொகையும் விளம்பரம் வைத்திருப்பவர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் உரிய அனுமதி பெற்று பேனர்கள் மற்றும் போர்டுகள் வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐந்தருவியில் ஆக்ரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர்      18.05.2010

ஐந்தருவியில் ஆக்ரமிப்பு அகற்றம்

தென்காசி : ஐந்தருவியில் ஆக்ரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் அகற்றப்பட்டது.

குற்றாலம், ஐந்தருவியில் சீசன் காலங்களில் தற்காலிக கடைகள் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுத்த காலம் முடிந்த பிறகும் சிலர் டவுன் பஞ்.,இடத்தை ஆக்ரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்ரமிப்பு பகுதியில் கடைகள் இருப்பதாக புகார்கள் சென்றன.

ஐந்தருவி கார்பார்க்கிங் பகுதி மற்றும் அருவிக்கு செல்லும் பகுதியில் ஆக்ரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணியில் குற்றாலம் டவுன் பஞ்.,ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணியை தென்காசி ஆர்.டி..மூர்த்தி, டி.எஸ்.பி.ஸ்டாலின், குற்றாலம் டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரி ராசையா பார்வையிட்டனர். இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


 


Page 108 of 204