Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

செஞ்சி நகர சாலையில் வாகனங்களை நிறுத்த தடை காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி 03.05.2010

செஞ்சி நகர சாலையில் வாகனங்களை நிறுத்த தடை காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

செஞ்சி,மே 2: செஞ்சி நகர சாலையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயணிகள் அல்லாத வாகங்களை நிறத்த காவல் துறை அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதி உத்மராஜ் புதன்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.

÷செஞ்சியில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பசுமை தாயக மாவட்ட அமைப்பாளர் வீ.சக்திராஜன் பொது நல வழக்கை செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

÷இவ்வழக்கில் போக்குவரத்தை சீர் செய்யக் கோரி காவல்துறைக்கு உத்தரவிட கோரப்பட்ட இடைக்கால மனுவில் காவல் துறை அதிகாரிகளை செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.

÷அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான செஞ்சி காவல் துறை ஆய்வாளருக்கு போக்குவரத்தை சீர் செய்ய நீதிமன்றம் சில கருத்துரைகள் வழங்கியது. அதை செயல்படுத்தவும், செயல்படுத்தியது குறித்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

÷ஆனால் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டவாறு போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறை சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலும், காவல் துறை சார்பில் வழக்கில் எவ்வித ஆட்சேபனையும் தாக்கல் செய்யாததாலும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி உத்தமராஜ் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்:

÷செஞ்சி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட காந்திபஜார், விழுப்புரம் ரோடு, ஆகிய இடங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் வரையில் பயணிகள், பொது மக்கள் பயணம் செய்யும் வாகனங்கள் அல்லாத இதரவாகனங்கள் செஞ்சி கூட்டுரோடில் இருந்து காந்தி பஜார் பேரூராட்சி அலுவலகம் முன் வரையிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சாலையில் நிறுத்துவதையும், சரக்குகள் கையாள்வதையும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துறை ஆய்வாளர் ஆகியோர் அனுமதிக்ககூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

சாலையோரத்தில் கட்டப்பட்ட 2 கோயில்கள், 14 வீடுகள் அகற்றம்

Print PDF

தினமணி 03.05.2010

சாலையோரத்தில் கட்டப்பட்ட 2 கோயில்கள், 14 வீடுகள் அகற்றம்

கோவை, மே 2: சாலையோர ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட 2 கோயில்கள், 14 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.

÷உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி கோவை நகரை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகரின் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடக்கின்றன.

÷பாப்பநாயக்கன்பாளையம், கருப்பாத்தாள் லேஅவுட்டில் இருந்து அவிநாசிசாலை நவஇந்தியா வரை திட்டச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

÷இச்சாலையில், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த கருப்பராயன், விநாயகர் கோயில்கள், 14 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றினர்.

÷அப்போது அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

 

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் விநாயகர் கோவில் இடிப்பு

Print PDF

தினமலர் 03.05.2010

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் விநாயகர் கோவில் இடிப்பு

திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் இருந்த விநாயகர் கோவில் நேற்று அதிகாலை இடிக்கப்பட்டது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், சுரங்க நடைபாதை பகுதியில் ரோடு அகலப்படுத்தப்படுகிறது. இதையொட்டி, அப்பகுதி விநாயகர் கோவிலில் இருந்த சிலைகள், ஒரு மாதத்துக்கு முன் அகற்றப்பட்டன. நேற்று அதிகாலை விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. டி.எஸ்.பி., ராஜா, தாசில்தார் பாலசுப்ரமணியம் மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில், அதிகாலை 4.30 மணியளவில் கோவில் இடிக்கப்பட்டது.

Last Updated on Monday, 03 May 2010 06:41
 


Page 113 of 204