Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 29.04.2010

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி ஊழியர்களுக்கும், வீட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், நகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்வதில்லை என்று நகராட்சியில் நடந்த குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டது.இதையடுத்து நகராட்சி பொறியாளர் ராமசாமி, நகர் நல அலுவலர் பழனியப்பன் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் மேற்கு மரியநாதபுரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றினர்.அப்போது வீட்டின் உரிமையாளர்களுக்கும்,நகராட்சி அலுவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.நகராட்சி ஊழியர்கள் கூறியதாவது: ஏற்கனவே ஆக்கிரமிப்பை அகற்றக் கூறி பலமுறை தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் அகற்றிக் கொள்ளாததால் இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றனர்.

Last Updated on Thursday, 29 April 2010 06:08
 

ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 26.04.2010

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.சேலம் - உளுந்தூர்பேட்டை வரையிலான நான்கு வழிச்சாலைபணிகள், சேலம் - காட்டுக்கோட்டை, காட்டுக்கோட்டை - உளுந்தூர்பேட்டை என இரண்டு கட்டங்களாக நடந்து வருகின்றன. சேலம் - ஆத்தூர் வழிப்பாதையில் நான்கு வழிச்சாலை பணியையொட்டி சாலையோர மரங்களை அப்புறப்படுத்தி, சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது. சாலை அமைவிடம் வரை உள்ள கட்டிடங்கள், வீடுகள், போன்றவற்றை இடித்து, புதிய தார் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated on Tuesday, 27 April 2010 07:15
 

ஆக்கிரமித்த' பேனர்கள் அகற்றம்

Print PDF

தினமலர் 26.04.2010

ஆக்கிரமித்த' பேனர்கள் அகற்றம்

திருவண்ணாமலை: தி.மலை நகரில் நாள் கணக்கில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் வாரக்கணக்கில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. மேலும், வியாபார நிறுவனங்களுக்கு இடையூறாகவும் வைக்கப்படுவதால், நகரில் திரும்பிய பக்கம் எல்லாம் பேனர்கள்மயமாகவே காட்சி அளிக்கிறது. ஆனாலும், இவற்றை அகற்ற போலீஸ் மற்றும் நகராட்சி துறையினர் ஏனோ தயக்கம் காட்டி வருகின்றனர்.இதனால், அனுமதி பெற்ற பேனர்களை வைப்பதற்கு கூட நகரில் இடம் கிடைப்பது இல்லை. நகரின் புறம்போக்கு இடங்களையும் சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தாங்கள் மட்டும்தான் பேனர் வைக்க வேண்டும். மற்ற யாரும் வைக்க கூடாது என்று அடாவடி செய்வதும் தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக பேனர்களை அகற்ற கலெக்டர் ராஜேந்திரன் உத்தரவிட் டார். இதைத்தொடர்ந்து தி.மலை ஆர்.டி.. பத்மா, தாசில்தார் சுப்ரமணி, நகராட்சி கமிஷனர் சேகர், இன்ஜினியர் சந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று நகரில் உள்ள பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இதன்படி, திருவண்ணாமலை பஸ்நிலையம், தேரடித்தெரு, அண்ணாதுரை சிலை, கிரிவலப்பாதை, பெரிய தெரு உட்பட நகரின் பல இடங்களில் வாரக்கணக்கில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

 


Page 117 of 204