Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஏர்போர்ட் எதிரே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 24.04.2010

ஏர்போர்ட் எதிரே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திரிசூலம் : சென்னை விமான நிலையம் எதிரே, திரிசூலம் ரயில்வே கேட்டிலிருந்து ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், நேற்று அதிரடியாக அகற்றப் பட்டன. அங்குள்ள கட்சி கொடி கம்பங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந் துள்ளது.சென்னை விமான நிலைய மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு, திரிசூலம் ரயில்வே கேட் சாலை - ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் பஸ் ஸ்டாப் இடமாற்றம் செய்யப் பட் டது. பஸ் ஸ்டாப் அமைந் துள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து, கடைகள் போடப்பட்டுள்ளன. இதனால் திரிசூலத்திலிருந்து ஜி.எஸ்.டி., சாலைக்கு வரும் வாகனங் களுக்கும், ஜி.எஸ்.டி., சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மேலும், சென்னை விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாலும், திரிசூலத் திற்கு பஸ் ஸ்டாப் அமைக்க திட்டமிட்டிருப் பதாலும், அங்கு ஆக் கிரமிப்புக்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை திரிசூலம் பஸ் ஸ்டாப் அருகே இருந்த கடைகளை இடித்து தள்ளினர். சைதாப்பேட்டை 16 கடைகள் அகற்றம்: நந்தனம் அருகில், சைதாப் பேட்டையில் கால்நடை மருத்துவமனை அருகில், மாநகராட்சிக்குச் சொந்தமான 8,000 சதுரடி நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் ஜெராக்ஸ் கடை, டீக் கடை, சைக்கிள் கடை உள் ளிட்ட 16 கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. சென்னை மாநகராட்சி, ஒன்பதாவது மண்டல உதவி இன்ஜினியர் யோகானந்த் பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், இவற்றை அகற்றும் முயற்சியில் இறங்கினர். இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு 10 கோடி ரூபாய்.

Last Updated on Saturday, 24 April 2010 05:47
 

சாலை ஓர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Print PDF

தினமணி 23.04.2010

சாலை ஓர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சிவகாசி, ஏப். 22: சிவகாசி நகராட்சியில் சாலை ஓர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே நகராட்சி, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் உள்ள அனைத்துக் கடை வீதிகளிலும், தெற்கு ரதவீதிகளிலும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இது ஒருவழிப் பாதையாக இருந்தும் பொதுமக்கள் அதனைக் கடைபிடிப்பதில்லை.

மேல ரதவீதியில் இரவு நேரக் கடைகள் சாலை ஓரங்களில் வைக்கப்படுகிறது.விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயில் முன்பு இரு சக்கர வாகனம் மட்டுமே நிறுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் நடக்க கூடமுடியாதபடி நடைபாதை கடைகளும், தள்ளுவண்டிக் கடைகளும் உள்ளன.

கோயில் முன்பு உள்ள அனைத்துக் கடைகளிலும் சாலையில் இரண்டு முதல் ஆறு அடி வரை பொருள்களை கடைக்கு வெளியே வைக்கிறார்கள். அருகில் உள்ள டானா பஜாரில் கடைக்காரர்கள் கடையை விட்டு வெளியே பொருள்களை வைக்கக் கூடாது என உத்தரவு உள்ளது. எனினும் அனைத்து கடைகளிலும் பொருள்கள் வெளியே வைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியில் நடைபாதைக் கடைகளும் உள்ளன.

புது ரோட்டுத் தெருவிலுள்ள அனைத்துக் கடைகளிலும் பொருள்களை நடைபாதையில் தான் வைத்துள்ளனர். என்.ஆர்.கே.ஆர். தெருவில் பல கடைக்காரர்கள் சரக்குப் பண்டல்களை நடைபாதையில் வைத்திருக்கிறார்கள்.

சிற்றுண்டி விடுதி நடத்துவர்களும் டீக்கடை நடத்துபவர்களும் நடைபாதையில் தான் வடை சுடும் பணியைச் செம்மையாகச் செய்கிறார்கள். பஸ்நிலையம் அருகே பயணிகள் நடக்கும் இடங்களில் பர்னிச்சர் வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற காரணங்களால் சிவகாசியில் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டு பெரிதும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு போதிய அளவில் போக்குவரத்து போலீஸôர் கிடையாது.

பொதுமக்களிடமும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்நிலையில் தெருவோர வியாபாரிகளுக்கும், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புக்கள் உரிமம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சாலை ஓர ஆக்கிரமிப்புக்களை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்:தஞ்சை நகராட்சிஆணையர் தகவல்

Print PDF

தினமலர் 22.04.2010

பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்:தஞ்சை நகராட்சிஆணையர் தகவல்

தஞ்சாவூர்:தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு களும் அகற்றப்படும் என்று தஞ்சை நகராட்சி ஆணையர் நடராஜன் தெரிவித்து உள்ளார்.தஞ்சையில் திருவையாறு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.இதுகுறித்து நகராட்சி ஆணையர் நடராஜன் அளித்த பேட்டி:தஞ்சையில் திருவையாறு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கலெக்டரின் நலத்திட்ட நிதியுதவியுடன் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. அதில் கடந்த சில நாட்களாக பூத்தொட்டிகள் வைக்கப் பட்டதுடன், டீக்கடை கழிவுநீரும் தேங்கியது.இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதேபோல் தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் தொடர்ந்து அகற்றுவோம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு ஆணையர் நடராஜன் கூறினார். நகராட்சி நிர்வாகம் பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.

Last Updated on Thursday, 22 April 2010 07:36
 


Page 119 of 204