Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 22.04.2010

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆவடி : ஆவடி, அம்பத்தூர் நகராட்சி பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன.
ஆவடி, நகராட்சி புதிய அலுவலக கட்டடம் முடியும் நிலையில் உள்ளது. இக்கட்டடத்தின், அருகிலிருந்த ஒரு கட்டடம் மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. புதிய அலுவலக கட்டடம் விரைவில் திறக்கப்படவுள்ளதால், இந்த கட்டடத்தை நகராட்சி ஊழியர்கள் இடித்து தரைமட்டமாக்கினர். இதற்காக, பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, ஆக்கிரமிப்புக்குள்ளான 30 கடைகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

Last Updated on Thursday, 22 April 2010 06:50
 

கரும்புக்கடையில் சாலை விரிவாக்கம்: 20 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி 21.04.2010

கரும்புக்கடையில் சாலை விரிவாக்கம்: 20 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோவை, ஏப். 17: கோவை - கரும்புக்கடை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக, ஆக்கிரமிப்பில் இருந்த 20}க்கு மேற்பட்ட கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவையைச் சுற்றிலும் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக உக்கடம்- கரும்புக்கடை போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆத்துப்பாலம் வரை சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

விரிவாக்கம் செய்யவுள்ள பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக் கடைகளை அகற்ற ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை மூலமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் நாகராஜன், கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிசந்திரன், மாநகரக் காவல் உதவி ஆணையர் பாலாஜி சரவணன், கோவை தெற்கு வட்டாட்சியர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கரும்புக்கடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையம் மற்றும் 20}க்கு மேற்பட்ட கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பாக இருந்தது. கோவை} பொள்ளாச்சி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

கட்டுமானப் பணிகள் இடிப்பு: ஊட்டி நகராட்சியினர் அதிரடி

Print PDF

தினமலர் 21.04.2010

கட்டுமானப் பணிகள் இடிப்பு: ஊட்டி நகராட்சியினர் அதிரடி

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியில்லாமல் அமைக்கப்பட இருந்த பொழுது போக்கு பூங்காவின் கட்டுமானப் பணிகளை நகராட்சியினர் இடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், அரசின் விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புகளை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் படி, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,337 கட்டடங்களை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது; ஆனால், பல காரணங்களால் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டன. தற்போது, இடிப்பு பணிகளை தொடர நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்புகளை துண்டிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கோடை சீசனை முன்னிட்டு கேளிக்கை பூங்காக்கள் திடீரென முளைக்க துவங்கியுள்ளன. ஊட்டி வேலிவியூ பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடந்தன; கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தற்காலிக கட்டடம் கட்டப்பட்டது. இதையறிந்த நகராட்சியினர், அப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடடத்தை இடித்தனர். மேலும், ஊட்டி படகு இல்லத்துக்கு அருகே தீம் பார்க் அமைக்க நடந்த ஆயத்தப் பணிகளையும் தடுத்தனர்.

Last Updated on Wednesday, 21 April 2010 06:26
 


Page 120 of 204