Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

மாநகராட்சிப் பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

Print PDF

தினமணி 19.04.2010

மாநகராட்சிப் பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

சேலம்
, ஏப். 18: சேலத்தில் மாநகராட்சிப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிக்க ஞாயிற்றுக்கிழமை முயற்சி நடைபெற்றது. அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

÷சேலம் மாநகராட்சி 35-வது டிவிஷனுக்குள்பட்ட 2-வது புதுத் தெருவில் சுமார் 30 ஆயிரம் சதுர அடி அரசு நிலம் உள்ளது. இங்கு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டுவதற்காக அண்மையில் இந்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.40 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ÷

இந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த இடத்தில் முள் கம்பி வேலி அமைக்க முயன்றனர். மேலும் அங்கிருந்த மரத்தை வெட்டிய அவர்கள் வேலி அமைப்பதற்காக கற்களை கொண்டு வந்து இறக்கினர்.

÷இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திமுகவினர் சிலர், மாநகராட்சி பள்ளிக்கூடம் வரக் கூடிய இடத்தில் தனியார் எப்படி ஆக்கிரமிப்பு செய்யலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸýக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீஸôர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்களிடம் பேசி வேலி அமைப்பதை தடுத்தனர். இதையடுத்து அவர்கள் பொருள்களை எடுத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Monday, 19 April 2010 10:41
 

ஆக்கிரிமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' : கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர் 19.04.2010

ஆக்கிரிமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' : கலெக்டர் உத்தரவு

ராமநாதபுரம் : 'மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இறுதியாக நோட்டீஸ் அனுப்புமாறும், பயனளிக்காமல் போனால் மேல்நடவடிக்கை எடுக்குமாறும், ' அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் எல்லா பகுதிகளிலும் பரவலாக பரவியுள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறை கண்மாய், அரசு புறம்போக்கு இடங்கள், ரோட்டோரங்களில் அதிகப்படியான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது குறித்து ஒவ்வொரு முறை எச்சரிக்கும் போது, அதை சம்மந்தப்பட்டவர்கள் பொருட்படுத்துவதில்லை. மாறாக, கூடுதல் ஆக்கிரமிப்பே செய்யப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தரும் எச்சரிக்கைகளையும் வீணாகிவருகிறது.ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பான மாதாந்திர கூட்டத்தில் கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது: 2006-07 பொதுப்பணித்துறை கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டத்தின் படி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள்,ரோட்டோரத்திலுள்ள ஆக்கிரமிப்புகள், வழிபாட்டு தலங்களை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லையெனில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பாலசுப்பிரமணியன் டி.ஆர்.., ஆர்.டி..,கள் இளங்கோ, ஞானகண்ணன், நிலஅளவை உதவிஇயக்குனர் சுந்தரபாண்டியன், தாசில்தார்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 19 April 2010 06:38
 

மாநகராட்சி இடத்தில் வேலி போட முயற்சி: முற்றுகையால் பரபரப்பு

Print PDF

தினமலர் 19.04.2010

மாநகராட்சி இடத்தில் வேலி போட முயற்சி: முற்றுகையால் பரபரப்பு

சேலம்: நடுநிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து முள்வேலி அமைக்க முயன்றனர். அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி 35வது வார்டுக்கு உட்பட்ட நம்பர் இரண்டு புதுத்தெரு பகுதியில், சுமார் 30 ஆயிரம் சதுரஅடி இடம் உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில் நடுநிலைப்பள்ளி கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தில், பள்ளி கட்ட 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட மாநகராட்சி இடத்தில், நேற்று காலை முள்வேலி அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர். இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்வேலி அமைக்க வந்தவர்களை சிறை பிடித்த பொதுமக்கள், அம்மாபேட்டை போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் எஸ்.., குமரேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் வந்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Last Updated on Monday, 19 April 2010 06:34
 


Page 121 of 204