Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விளம்பர பலகை அகற்றம்

Print PDF

தினமலர் 26.03.2010

விளம்பர பலகை அகற்றம்

கூடலூர்: கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே, வழித்தட அறிவிப்பு பலகையை மறைத்து வைத்திருந்த 'டிஜிட்டல்' பேனர் அகற்றப்பட்டது. கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டான பகுதியிலிருந்து, மைசூர் சாலையும், கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தேவர்சோலை சாலை பிரிந்து செல்கிறது. சாலை பிரியும் பகுதியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் வழித்தட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு பலகையை மறைந்து, விளம்பர பேனர்கள் வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது; இப்பகுதிக்கு வாகனங்களில் புதிதாக வருபவர்கள், வழித்தடம் தெரியாமல் அவதிப்பட வேண்டியுள்ளது. மறைத்து வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று மதியம் நகராட்சி கவுன்சிலர் ஆண்டனி முன்னிலையில், நகராட்சி ஊழியர்கள், விளம்பர பலகையை அகற்றினர். ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், நகராட்சியின் அனுமதி பெற்று வைக்கும் படி, ஊழியர்கள் அறிவுறுத்தினர். கூடலூர் நகரப் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பலகைகள் வைப்பதை, நகராட்சி நிர்வாகத்தினர் தடுக்க வேண்டும்.

Last Updated on Friday, 26 March 2010 05:41
 

போடியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றநகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 25.03.2010

போடியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றநகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

போடி: போடியில் கோயிலை சாதகமாக பயன்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். போடி நகராட்சி கூட்டம் தலைவர் ரதியாபானு தலைமையில் நடந் தது. துணைத்தலைவர் சங்கர், கமிஷனர் சரவணக்குமார், பொறியாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவாதம் வருமாறு: துணைத்தலைவர்: பஸ் ஸ்டாண்ட், மெயின்ரோடுகளில் மட்டுமே துப்புரவு பணிகள் நடக்கிறது. மற்ற பகுதிகளிலும் துப்புரவு பணியை மேம்படுத்த கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும்.ஜெயராஜ்: பெரியாண்டவர் ஹை ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பை பாஸ் ரோடாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.முருகன்: கோயிலை சாதகமாக பயன்படுத்தி மெயின்ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். போக்குவரத்து இடையூறாக உள்ளவற்றை அகற்றவேண்டும்.

கமிஷனர்: ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி முழுமையாக அகற்றப்படும்.ரவிக்குமார்: நிழல்தரும் மரங் களை நகராட்சி பகுதியில் வளர்க்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.கமிஷனர்: அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தன்னிச்சையாக தெருக்களில் குப்பை கொட்டும் குடியிருப்பு வீடுகளுக்கு ஒவ்வொரு முறையும் 100 ரூபாயும், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்களுக்கு 200 ரூபாயும், உணவு விடுதி மற்றும் சிறிய திருமண மண்டபங்களுக்கு 500 ரூபாயும், பெரியவைகளுக்கு ஆயிரம் ரூபாயும் வசூலிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான பயனாளிகள் 25 நபர்களை தேர்வு செய்து தலா 500 ரூபாய் வீதம் வழங்க முடிவு செய்யப் பட்டது.

Last Updated on Thursday, 25 March 2010 09:39
 

ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 24.03.2010

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., -மதுரை ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணி மனை முதல் ராமகிருஷ்ணாபுரம் ஜங்ஷன் வரை செய்யப் பட்டிருந்த ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன. பெரும்பான்மையான கடைகளின் படிக்கட்டுகளும்,மேற்கூரைகள் மட்டுமே அகற்றப்பட்டன.

Last Updated on Wednesday, 24 March 2010 08:16
 


Page 127 of 204