Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 19.03.2010

கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து முதுநகர் மணிக்கூண்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் கடலூர் முதுநகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கடைகளின் முன்பும், நடைபாதை பகுதிகளும் ஆக்கிரமிக் கப்பட்டிருந்ததால் போக் குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என அறிவித்தனர்.இதைத் தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை பொறியாளர்கள் மற்றும் கடலூர் தாசில்தார் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் ஜெய் சங்கர், முருகன், நகராட்சி ஊழியர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக் கூண்டிலிருந்து கடலூர் முதுநகர் வரையுள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடைகாரர்கள் தாமாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

Last Updated on Friday, 19 March 2010 06:21
 

காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றல்

Print PDF

தினமணி 16.03.2010

காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றல்

போடி, மார்ச் 15: போடியில், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த இறைச்சிக் கடையை அகற்ற நகராட்சி கவுன்சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், காவல் துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

போடி நகராட்சி உப்பு தண்ணீர் சந்தையில் இயங்கும் தினசரி காய்கறிச் சந்தைப் பகுதியில் கடைகளின் முன்பகுதியில் மண்மேடு, சிமெண்ட் தளம் அமைத்தும், கூரைகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் இப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.

திங்கள்கிழமை இப் பகுதியில் நகராட்சி ஆணையாளர் க. சரவணக்குமார், உதவிப் பொறியாளர் குணசேகரன், கட்டட ஆய்வாளர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந் நிலையில், போடி நகராட்சி கவுன்சிலர் பரமசிவம் என்பவர் இப் பகுதியில் நகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, இறைச்சி கடை அமைத்திருந்தாராம்.

அதனை அகற்ற முயன்றபோது, அவர் நகராட்சி அலுவலர்களுடனும், பொக்லைன் இயந்திர வாகன ஓட்டுநருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, நகராட்சி சார்பில் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டது.

அதன் பேரில், போலீஸôர் வரவழைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Last Updated on Tuesday, 16 March 2010 11:43
 

ராமேசுவரம் நகராட்சியில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வட்டாட்சியர்

Print PDF

தினமணி 16.03.2010

ராமேசுவரம் நகராட்சியில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வட்டாட்சியர்

ராமேசுவரம், மார்ச் 15: ராமேசுவரம் நகராட்சியில் சாலையோரத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகள், வீடுகள் புதன்கிழமை அகற்றப்பட உள்ளதாக ராமேசுவரம் வட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார்.

ராமேசுவரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட கோயில் நான்கு ரத வீதி, திட்டகுடி, வர்த்தகன் தெரு, மார்க்கெட் தெரு, தேவர் சிலை, வேர்க்கோடு பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும் பக்தர்களும், பொதுமக்களும் நடமாட முடியாமல் பரிதவிக்கின்றனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து ராமேசுவரம் வட்டாட்சியர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ராமேசுவரம் நகராட்சி எல்லைகுள்பட்ட சாலையோரங்களில் வணிகக் கடைகள், வீடுகள் ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

எனவே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை (மார்ச் 17) அகற்றப்படவுள்ளன.

இப்பணியில் வருவாய்த்துறை ஊழியர்கள், நகராட்சி ஆணையர் போஸ் உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் போலீஸôர் ஈடுபட உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என வட்டாட்சியர் முருகேசன் கேட்டுக்கொண்டார்.

Last Updated on Tuesday, 16 March 2010 11:34
 


Page 130 of 204