Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு : அகற்ற மாநகராட்சி விடாமுயற்சி

Print PDF

தினமலர் 12.03.2010

பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு : அகற்ற மாநகராட்சி விடாமுயற்சி

திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பல கடைக்காரர்கள் விற்பனை பொருட்களை மக்கள் நிற்கும் பகுதிகளில் பரப்பி வைக்கின்றனர். இதனால், பயணிகளுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது.கடைகளில் வெளியாகும் குப்பையையும், குப்பை தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் வீசி விடுகின்றனர். இதுதவிர, தள்ளுவண்டி கடைகளும் பஸ் ஸ்டாண்டிற்குள் அதிகமாக ஆக்கிரமிக்கின்றன. இதனால், பஸ்களை நிறுத்தக்கூட வழியின்றி கடும் நெருக்கடி ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆங்காங்கே டூவீலர்களை நிறுத்துவதோடு, கண் மூடித்தனமாக பஸ்களுக்குள் புகுந்து செல்வதால், பயணிகள் மீது மோதும் நிலை உள்ளது.இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரத்திலும், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட இருக் கைளுக்கு இடையே, அங்கு சுற்றித்திரியும் வழிப்போக்கர்கள் படுக்கின்றனர். இதனால், பயணிகள் இருக்கைகளை பயன்படுத்த முடிவதில்லை.கடந்த மாதம், மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது; இருக்கைகளுக்கு இடையே படுத்து கிடந்தவர்களும் துரத்தியடிக்கப்பட்டனர். வணிக வளாக கடைக்காரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டது.இருப்பினும். பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் கடைக்காரர்கள், பொருட்களை நடைபாதை பகுதிகளில் வைத்து விற்பனை செய்தனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலகம் உள்ள பகுதியிலேயே பலர் படுத்து உறங்கினர். பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாக சுவர்களும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அலங்கோலமாக காட்சியளித்தது.

கலெக்டர் சமயமூர்த்தி, பஸ் ஸ்டாண்ட் நிலை குறித்து விசாரித்துள்ளார்; பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தேசித்துள்ளார். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நேற்று, மீண்டும் அதிரடி ஆக்ஷனில் இறங்கியது. மாநகராட்சி பணியாளர்களை கொண்டு, பஸ் ஸ்டாண்ட்டிற்குள் ஆக்கிரமிப்பை அகற்றி, போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தியது. கண்ட இடங்களில் படுக்கை விரித்தவர்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். மாநகராட்சி கழிப்பிட சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.பஸ் ஸ்டாண்டில் இருந்த சுகாதார பணியாளர்களிடம் கேட்ட போது, "இனி, பழைய பஸ் ஸ்டாண்ட்டை வாரம் ஒருமுறை கழுவி சுத்தம் செய்வோம்; பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் யாரும் படுத்து உறங்காதபடி கண்காணிக்கப்படும்,' என்றனர்.

Last Updated on Friday, 12 March 2010 06:15
 

ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் - ஆட்சியர்

Print PDF

தினமணி 11.03.2010

ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் - ஆட்சியர்

ராமநாதபுரம், மார்ச் 10: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றுமாறு, ஆட்சியர் த.. ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி, விபத்து ஏற்படுவதைத் தடுக்க போக்குவரத்துக் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சாலையோரங்களில் உள்ள மணல்களை அப்புறப்படுத்தவும், நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.

மேலும், நியாய விலைக் கடைகளிலிருந்து அரிசிக் கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் சனிக்கிழமைக்குள் அகற்றிட வேண்டும்.

தொடர்ந்து, பெண்கள் மீதான வன்கொடுமையைத் தடுக்கும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, மாவட்டத் தலைநகர் மற்றும் தாலுகா தலைமையிடங்களில் பேரணிகள், ஊர்வலங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்திட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் திரும்பி வரும்போது அவர்களை தீவிரமாகக் கண்காணித்து, உரிய தண்டனை வழங்கிட வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தின்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின் போது சிறப்பாக பணியாற்றிய, ராமேசுவரம் வட்டாட்சியர் முருகேசன், உதவியாளர்கள் சுரேஷ்குமார், மார்ட்டின்ராஜா ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி கே. பாலசுப்பிரமணியம், எஸ்.பி. பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பாஸ்கரன், உள்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Last Updated on Thursday, 11 March 2010 09:08
 

மார்ச் 13ல் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு

Print PDF

தினமலர் 11.03.2010

மார்ச் 13ல் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு

ராமநாதபுரம் : மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் மார்ச் 13ல் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் ஹரிஹரன் பேசியதாவது: மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்து போலீசார் முன்வரவேண்டும். ராமநாதபுரத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை மார்ச் 13ல் அகற்ற வருவாய்துறை , போலீசார், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல்அலுவலர்கள் தயாராக வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் திரும்பி வரும் போது, அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், என்றார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் சிறப்பாக பணியாற்றிய ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன், உதவியாளர்கள் சுரேஷ்குமார், மார்டின் ராஜா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பிரதீப்குமார் எஸ்.பி., பாலசுப்பிரமணியன் டி.ஆர்.., வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், அரசு போக்குவரத்து கோட்ட மேலாளர் யோகேஸ்வரன் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 11 March 2010 06:10
 


Page 133 of 204