Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 11.03.2010

நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற் றும் பணி இன்று நடக்கிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் நிலையத் தின் உள்ளே சரியாக பஸ்கள் செல்வதில்லை. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நகர பகுதி சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. எனவே அதிகளவு விபத் துக்கள் நடக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக் கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட் டார். அதன்பேரில் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறையினர் கடலூர்-பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப் பம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று (11ம் தேதி) காலை முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதற்குள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அவர்களாகவே அகற்றி கொள்ள வேண்டுமென தண்டோரா போட்டனர்.

Last Updated on Thursday, 11 March 2010 06:07
 

அதிரடி: ஆக்கிரமிப்பாக அமைந்த கோவில் அகற்றம்; மருத்துவ மையம் விரிவாக்கத்திற்காக மாற்றம்

Print PDF

தினமலர் 11.03.2010

அதிரடி: ஆக்கிரமிப்பாக அமைந்த கோவில் அகற்றம்; மருத்துவ மையம் விரிவாக்கத்திற்காக மாற்றம்


புளியந்தோப்பு: புளியந்தோப்பில் மருத்துவ மையத்தின் விரிவாக்கப் பணிக் காக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அம்மன் கோவில் ஒன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

புளியந்தோப்பு, 41வது வார்டில் மகளிர் நல மருத்துவ மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அம்மருத்துவ மையம் பல லட்சம் ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ மைய வளாகத்தின் உட்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அம்மன் கோவில் ஒன்று ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. அந்த இடம் புதிய மருத்துவமனை வளாகம் அமைக்க தேவைப்பட்டது. இதையடுத்து, அம்மன் கோவிலை அகற்ற மாநகராட்சியினர் முடிவு செய்தனர். பெரம்பூர் தாசில்தார் எத்திராஜுலு தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், பொக்லைன் உதவியுடன் நேற்று காலை, அம்மன் கோவிலை அகற்றினர். பாதுகாப்பிற்காக புளியந்தோப்பு உதவிக் கமிஷனர் சரவணன் மேற்பார்வையில், நான்கு இன்ஸ் பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அம்மன் கோவில் அகற்றப்பட்ட தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்த பெண் கள் அங்கு கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

Last Updated on Thursday, 11 March 2010 05:49
 

2 கடைகள் நேற்று அதிரடியாக அகற்றம்

Print PDF

தினமலர் 10.03.2010

2 கடைகள் நேற்று அதிரடியாக அகற்றம்

கும்பகோணம்,: கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலை ஒட்டியுள்ள 2 கடைகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் எதிரே உயர்மட்டஹைமாஸ் விளக்கு நகராட்சியால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஜி.கே.மூப்பனார் சிலை வைக்க நகராட்சியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இடத்தில் ஜி.கே.மூப்பனாரின் சிலை வைக்க காங். கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதனால் ஹைமாஸ் விளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டுஉள்ளது.இதையடுத்து உச்சிப்பிள்ளையார் கோயிலின் மேற்கு பகுதியில் உள்ள 2 கடைகளை அகற்றிவிட்டு ஹைமாஸ் விளக்கு வைக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி வளையல் கடை வைத்துள்ள சாமிநாதன், பெட்டிக் கடை வைத்துள்ள யுவராஜ் ஆகியோ ரது 2 கடைகளும் நகராட்சியால் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.

இதற்கிடையில் கடைகளை அகற்றக் கூடாது என சாமிநாதனும், யுவராஜும் கோர்ட்டில் தடை பெற்று உள்ளனர். ஆனால் கோர்ட் தடையை மீறி நகராட்சி நிர்வாகம் கடைகளை அகற்றியதால் வணிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். காசி விஸ்வநாதர் கோயிலின் உப கோயிலாக உச்சிப் பிள்ளையார் கோயில் நிர்வகிக்கப்ப டுகிறது. கடந்த ஒருவாரம் முன்பு கோயில் செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் அலுவலர்கள் இந்த 2 கடைகளையும் அகற்றுவதற்கு சென்றனர். அப்போது கோர்ட் தடை ஆணையை கடை வைத்துள்ளவர்கள் 2 பேரும் செயல் அலுவலரிடம் காண்பித்தனர். இதனால் 2 கடை களையும் அகற்ற முடியாமல் கோயில் நிர்வாகத்தினர் திரும்பி வந்து விட்டனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளை விதிமுறை களுக்கு மாறாக அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது.

Last Updated on Wednesday, 10 March 2010 06:36
 


Page 134 of 204