Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

சக்கர தீர்த்த குளத்தை சுற்றி ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி

Print PDF

தினமலர் 09.03.2010

சக்கர தீர்த்த குளத்தை சுற்றி ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி

திருவண்ணாமலை : தி.மலை நகரில் சக்கர தீர்த்த குளத்தை சுற்றி ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. "திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் கோயில் ராஜகோபுரம் எதிர்புறம் உள்ள சக்கர தீர்த்த குளத்தை சுற்றிலும் அதிகளவில் தள்ளுவண்டி கடைகள் உட்பட ஆக்கிரமிப்புகள் காணப்படுகிறது. இது, அங்குள்ள சக்கரதானீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது' என கலெக் டருக்கு புகார்கள் வந்தன. எனவே, இங்குள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் சேகர், இன்ஜினியர் சந்திரன், தாசில்தார் சுப்ரமணி, இன்ஸ் பெக்டர் குணசேகரன் அடங் கிய கூட்டுக்குழு சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. இதனை கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது, அந்த குளத் தின் கரையில் 2 கடைகள் இயங்கி வந்தன. எதற்காக அவைகளை அப்புறப்படுத்தவில்லை என்று நகராட்சி அதிகாரிகளிடம் அவர் கேட் டார். அதற்குள் அங்கு வந்த வியாபாரிகள், தாங்கள் வாடகைக்கு இருப்பதாகவும், அதற்கு உரிய ஆவணம் உள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், அந்த இடத்தில் கடைகள் இயங்குவதற்கு உரிமம் உள்ளதா என்பது குறித்த அந்த ஆவணங்களை சரிபார்க்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், தேரடி வீதியில் விநாயகர் தேர் அருகே மாணிக்கவாசருக்கு தனி கோயில் உள்ளது. மிக பழமையான இந்த கோயில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதாக கலெக்டருக்கு தகவல் வரவே, அங்கு சென்றும் ஆய்வு செய்தார். அதில், கோயில் இருந்த இடம் இப்போது கடையாகவும், வீடாகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த இடத்தில் இப்படி ஒரு கோயில் இருப்பது நகரில் பலருக்கும் தெரியாமல் இருந்தது. கலெக்டரின் ஆய்வுக்கு பிறகே மாணிக்கவாசகர் கோயில் இருப்பது வெளியே தெரிய வந்தது. இது குறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: சக்கர தீர்த்த குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார் வந்தன. இவைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இனி ஆக்கிரமிப்புகளே அங்கு உருவாகாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 09 March 2010 06:30
 

கெடு! ஆக்கிரமிப்புகளை 7ம் தேதிக்குள் அகற்ற உத்தரவு : காஞ்சி பிள்ளையார்பாளையம் பகுதியில் அதிரடி

Print PDF

தினமலர் 06.03.2010

கெடு! ஆக்கிரமிப்புகளை 7ம் தேதிக்குள் அகற்ற உத்தரவு : காஞ்சி பிள்ளையார்பாளையம் பகுதியில் அதிரடி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் 7ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் நகரை அழகுப்படுத்தவும், பல் வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இந்நிதியில், குளங்களை தூர் வாரி அழகுப்படுத்துதல், பூங்காக்கள் அமைத்தல், சிமென்ட் சாலைகள் அமைத்தல், நீச்சல் குளம் அமைத்தல், மழைநீர் கால் வாய் அமைத்தல், சாலையோரம் பிளாட்பாரம் அமைத்தல் உட்பட பல் வேறு பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன.சாலைகள் அமைப்பதற் காக நகரில் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் முழுமையாக நடைபெறவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. கடந்த மாதம் ரயில்வே ரோடில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ் சாலைத் துறையினர் ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட இடத்திலிருந்த கட்டடங்களை இடித்து தள்ளினர். அதன்பின் இடிபாடுகள் அகற்றப்படவில்லை. அப் பகுதி மக்கள் நகராட்சியில் முறையிட்டனர். நகராட்சி அதிகாரிகள், இடிபாடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் தான் அகற்ற வேண்டும் என் றனர்.

இடிபாடுகள் அகற்றப் படாததால் ஆக்கிரமிப்பாளர் கள் மீண்டும் இடத்தை ஆக்கிரமிக்க துவங்கியுள் ளனர். அதன்பின், நகராட்சி சார்பில் காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெரு, பெரிய காஞ்சிபுரம் தேரடி வீதி ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், நகராட்சி ஊழியர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர். சில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். சிலவற்றை அகற்றவில்லை. முதல்வர் ஒதுக்கிய நிதியில் பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம். தெரு, மண்டபம் தெரு பகுதி யில் பல லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது.

சாலை அமைப்பதற்கு முன் தெருவின் இரு புறங் களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, இடத்தை சர்வே செய்து அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகளை அடையாளமிட்டனர். பொதுமக்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் அளித்தனர். நோட்டீசும் வழங்கினர். நேற்று நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி., இயந் திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சி.எஸ்.எம். தெருவிற்கு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள், அவர்களிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டனர்.

அதைத் தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை 7ம் தேதிக்குள் அகற்றிவிட வேண்டும். அகற்ற மறுத்தால், நகராட்சி சார்பில், 8ம் தேதி ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப் படும் என அறிவித்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.
நகர் முழுவதும் ஆங் காங்கே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஊழியர்கள் பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Saturday, 06 March 2010 10:03
 

ஆக்கிரமிப்பு சாலையை மீட்டது மாநகராட்சி

Print PDF

தினமணி 06.03.2010

ஆக்கிரமிப்பு சாலையை மீட்டது மாநகராட்சி

கோவை, மார்ச் 5: கோவை, வேலாண்டிபாளையம் பகுதியில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.

÷கோவை மாநகராட்சியின் 61}வது வார்டுக்கு உட்பட்ட வேலாண்டிபாளையம், மனையடி ஜோதிடர் வீதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சி சாலை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.

÷இதுகுறித்து அந்த வார்டு கவுன்சிலர் கே.புருஷோத்தமன் மற்றும் மக்கள் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். அதையடுத்து ஆணையரின் உத்தரவுப்படி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிசந்திரன் தலைமையிலான மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றினர்.

÷இதன் மூலம், வேலாண்டிபாளையம்- ராமலிங்கம் நகரில் இருந்து தடாகம் சாலைக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இருந்த காரணத்தால் இதுவரை தடாகம் சாலைக்குச் செல்ல ராமலிங்கம் நகர் பகுதியினர் நீண்டதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

Last Updated on Saturday, 06 March 2010 06:24
 


Page 135 of 204