Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பெரிய காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 05.03.2010

பெரிய காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

காஞ்சிபுரம் : பெரியகாஞ்சிபுரம் தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகாஞ்சிபுரம் தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஏகாம்பரநாதர் கோவிலுக்காக, புதிய தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த வீதியில், தேரை நிறுத்துவதற்கு வசதியாக, தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. நகராட்சி சார்பில் பழைய தேர் நின்ற பகுதியில் இருந்த வெல்டிங் கடை நேற்று அகற்றப்பட் டது. கடை உரிமையாளர் நோட்டீஸ் வழங்கவில்லை எனக் கூறியதை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். தற்போது அகற்றப் பட்ட கடை அருகில் சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அவற்றையும் அகற்றிவிட்டு சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Last Updated on Friday, 05 March 2010 07:41
 

பெருந்துறை நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 05.03.2010

பெருந்துறை நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பெருந்துறை: பெருந்துறையில் ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. பெருந்துறையில் வர்த்தக நிறுவனங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. நிறுவனங்கள் தங்கள் விளம்பர பலகைகளை ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ளன. போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் செல்ல இட வசதியின்றி, விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயராமன், அனைத்து சங்கங்களையும் கூட்டி விவாதித்தார். அதன் பயனாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல முறை தேதி குறிக்கப்பட்டது. ஆனால், ஒரு அதிகாரி இருந்தால், மற்றவர் இருப்பதில்லை. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளி போய் கொண்டே இருந்தது. நேற்று பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். காலை 9 மணி முதல் இரவு வரை தொடர்ந்து நடந்தது.

Last Updated on Friday, 05 March 2010 07:26
 

ஆக்கிரமிப்பு அகற்றல்: பணி ஒத்திவைப்பு

Print PDF

தினமலர் 03.03.2010

ஆக்கிரமிப்பு அகற்றல்: பணி ஒத்திவைப்பு

வேலூர்:வேலூர் டோல்கேட் பகுதியில் இன்று நடப்பதாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, போலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.வேலூர் அல்லாபுரம் பஸ் நிறுத்தத்தை ஒட்டியுள்ள டோல்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று (பிப்.3ல்) அகற்றப்படும் என மாநகராட்சி நிர்வாகம் 2 நாட்கள் முன்பு அறிவித்திருந்தது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி வியாபாரிகளிடம் நேரில் சென்று கூறினர்.

இன்று மேற்கொள்வதாக இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு, போலீஸ் பாதுகாப்பு கேட்டு வேலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் பாண்டியராஜனிடம், நகரமைப்பு அலுவலர் கண்ணன் கடிதம் கொடுத்தார். ஆனால் அதை இன்ஸ்பெக்டர் வாங்க மறுத்து விட்டார். ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் இருந்து இடிபாடுகள் இன்னமும் அகற்றப்படமல் உள்ளது.

இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இடிபாடுகளை அகற்றிய பின்னரே மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கலாம் என்றும், அப்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் கூறியதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, சிதம்பரம் பல்கலை.,யில் நடந்த மாணவர்கள் பிரச்னைக்காக வேலூர் பகுதியில் இருந்து ஏராளமான போலீசார் சென்று விட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றல் பணிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்று கூறினர்.எனவே இன்று டோல்கேட் பகுதியில் நடப்பதாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தள்ளி வைத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர

Last Updated on Wednesday, 03 March 2010 07:05
 


Page 136 of 204