Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கி.கிரியில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்

Print PDF

தினமலர் 02.03.2010

கி.கிரியில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி நகரின் முக்கிய சாலையான ரவுண்டானாவில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.., வினர் கட்சி கொடி கம்பம் அமைத்தனர். இதற்கு மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால், கட்சி கொடி வைக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அ.தி.மு.., வினர் கொடி கம்பம் நட்டதால், அதே பகுதியில் தி.மு.., - காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சினரும் திடீரென கட்சி கொடி கம்பங்களை அமைத்தனர். இதனால், ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து கட்சி கொடிகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.

நெடுஞ்சாலைதுறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேற்று காலை 11 மணிக்கு போலீஸாரின் துணையோடு நகரின் முக்கிய சாலைகளான சென்னை சாலை, பெங்களூரு சாலை, சப்-ஜெயில் ரோடு, குப்பம் ரோடு ஆகிய பகுதிகளில் சாலைகளில் ஆக்கிமித்து கட்டி வைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும், ரவுண்டானா பூங்கா பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தில் அதிக அளவில் பழக்கடைகள், பூக்கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கடைகளையும் அதிகாரிகள் அகற்றினர். பூ மற்றும் பழக்கடைகளை அகற்றும் போது அதிகாரிகளுக்கும், கடைகாரர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதானால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி நகரின் முக்கிய சாலைகளான பெங்களூரு சாலை, சென்னை சாலை மற்றும் சேலம் சாலை ஆகியவற்றின் இரண்டு புறங்களிலும் நடைபாதை அமைக்க கடந்த ஓராண்டுக்கு முன் அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். ஆனால் ஒரு வார காலத்துக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் தங்கள் கடைகளின் முன் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் நடைபாதை அமைக்கும் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
தற்போது, "அதிரடியாக அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதியில் மீண்டும் முளைக்காமல் இருக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு

Print PDF

தினமலர் 01.03.2010

ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பட்டுக்கோட்டை ஆர்.டி.., அலுவலகத்தில் நகர போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆர்.டி.., மெய்யழகன் தலைமை வகித்தார். எம்.எல்.., ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., நாராயணசாமி, இன்ஸ் பெக்டர் செங்கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன், நிலவள வங்கி முன்னாள் தலைவர் வீரசேனன், நகராட்சி துணைத் தலைவர் கண்ணன், வர்த்தக சங்க துணைத் தலைவர் அய்யமுத்துநாடார், லாரி உரிமையாளர் சங்க தலைவர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகன் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்: பட்டுக்கோட்டை நகருக்குள் நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் 3ம்தேதி நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை கூட்டாக சேர்ந்து நில அளவை செய்யப்படும். பின்னர் ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற கால அவகாசம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சியினர், பொதுமக்கள் நகருக் குள் விளம்பர தட்டிகள் வைப்பது, தலைமை அஞ்சலகம் அருகே பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது. அனுமதி பெற்ற விளம்பர தட்டிகள் வைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாத தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது. நகருக்குள் சாலைகளில் குவிந்துள்ள மணலை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுப்பது. நகருக் குள் இருசக்கர வாகனம், கார்கள் நிறுத்த இடம் தேர்வு செய்து அதற்கான அறிவிப்பு பலகைகள் வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்கள் நிறுத்தும் இடம் குறித்து நகராட்சி நிர்வாகம் போர்டு வைத்து, அந்த இடங்களில் நிறுத்தாத பஸ் டிரைவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது. நகரில் கடைகளுக்கு லாரிகள் மதியம் 12 மணி முதல் 3 வரை பொருட்கள் இறக்குவது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பது. பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் காவல்துறை உதவியுடன் வரும் 8 அல்லது 9ம்தேதிக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Monday, 01 March 2010 06:22
 

ஆரணி மகளிர் பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Print PDF
தினமணி 26.02.2010

ஆரணி மகளிர் பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

ஆரணி, பிப். 25: ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.

ஆரணி நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியது:

முருகன்: ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். இங்கு அனுமதியின்றி கடைகள் கட்டியுள்ளதை இடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட வேண்டும். விஏகே நகர் பகுதியில் வீடுகள் அனுமதியின்றி கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு வரி விதிக்க வேண்டும். கோட்டை மைதானம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஆணையர்: பள்ளி இடத்தில் கடைகள் அனுமதியின்றி கட்டியிருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியிருந்தால், ஆய்வு செய்து வரி விதிக்கப்படும்.

எஸ்.கே.ரத்தினகுமார்: நகரில் வரி வசூல், குத்தகை பாக்கி வசூலித்தால் வார்டுகளில் பல்வேறு திட்டப்பணிகள் செய்ய ஏதுவாக இருக்கும். வரி கட்டாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலாளர் ராமஜெயம்: நமக்கு நாமே திட்டம் மூலம் 3-ல் ஒரு பங்கு நிதி கட்டி தங்கள் பகுதி திட்டப் பணிகளை செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவு வந்துள்ளது.

..ரமேஷ்: ஏற்கெனவே இருந்த நமக்கு நாமே திட்டத்தில் 4-ல் ஒரு பங்கு நிதியை கட்டி பணிகள் செய்துகொள்ளலாம் என உத்தரவு இருந்தது. அதேபோல்

தற்போது வந்திருக்கும் திட்டத்தையும் 4-ல் ஒரு பங்கு தொகை கட்ட மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் பேசினர்.

நகராட்சி ஆணையர் சசிகலா, நகர்மன்றத் துணைத் தலைவர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 26 February 2010 09:36
 


Page 137 of 204