Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 26.02.2010

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் நதானியேல், ஆய் வாளர் காஜா மைதீன் , நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி , வடக்கு ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டன.

Last Updated on Friday, 26 February 2010 06:17
 

குரோம்பேட்டையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம் சீல் வைப்பு

Print PDF

தினமணி 25.02.2010

குரோம்பேட்டையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம் சீல் வைப்பு

சென்னை, பிப்.24: சென்னை குரோம்பேட்டையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்துக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி..) அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.

விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக 2007}ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இதன் பிறகு புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் விதிமீறல்கள் இருந்தால் அந்த கட்டடங்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க சி.எம்.டி.. உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் துணையுடன் சி.எம்.டி..வின் அமலாக்கப் பிரிவு நடை முறைப்படுத்தி வருகிறது.

2007} ஜூலை மாதத்துக்கு பிறகு கட்டப்படும் கட்டடங்களில் விதிமீறல் அதிகம் உள்ளதாக சுமார் 100}க்கும் மேற்பட்ட கட்டடங்களின் பட்டியலை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இறுதி செய்தனர்.

இந்த பட்டியலில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு விதிமீறல் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இதற்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருந்த கட்டடங்களை பூட்டி சீல் வைப்பது, இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டாக இந்த நடவடிக்கையில் சென்னை மற்றும் புறநகரில் 30}க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மீது இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி. சாலையில் எம்..டி. மேம்பாலம் அருகில் சர்வே எண்: 489/4 நிலத்தில் தரைதளத்துடன் சேர்த்து 3 தளம் வரை அனுமதி வாங்கிய தனியார் ஒருவர் விதிகளை மீறி 6 மாடி வரை கட்டியுள்ளார்.

இது குறித்து சி.எம்.டி.. அனுப்பிய நோட்டீஸ்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்காததால், அந்த குறிப்பிட்ட அடுக்குமாடி கட்டடத்தை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர் என சி.எம்.டி..வின் உறுப்பினர் செயலர் விக்ரம் கபூர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Last Updated on Thursday, 25 February 2010 10:48
 

அனுமதியற்ற கட்டட கட்டுமானப் பணி நிறுத்தம்: மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமணி 24.02.2010

அனுமதியற்ற கட்டட கட்டுமானப் பணி நிறுத்தம்: மாநகராட்சி நடவடிக்கை

கோவை, பிப்.23: அனுமதியற்ற கட்டட கட்டுமானப் பணியை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.

கோவை மாநகராட்சி 1}வது வார்டு பீளமேடு}ஆவாரம்பாளையம் சந்திப்பு பகுதியில் அனுமதியின்றி 4 மாடி கட்டடம் கட்டப்படுவதாக நகரமைப்புப் பிரிவுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் செüந்தரராஜன், உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுவது விசாரணையில் தெரியவந்தது. போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாக்கடை கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தும் கட்டடம் கட்டப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கட்டுமானப் பணியை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். கட்டடத்தின் அருகே மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகையும் பொருத்தப்பட்டது. அங்கே வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் செங்கல்கள், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 10:28
 


Page 138 of 204