Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பண்ருட்டி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நாளை துவக்கம்

Print PDF

தினமலர் 24.02.2010

பண்ருட்டி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நாளை துவக்கம்

பண்ருட்டி: பண்ருட்டி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நாளை 25ம் தேதி துவங்குகிறது. பண்ருட்டி நகரில் கடலூர் சாலை, ராஜாஜி சாலை, இந்திராகாந்தி சாலை, காந்திரோடு, காய் கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் செல்லமுடியாமல் கடும் பாதிப்படைந்து வந்தனர். பஸ்நிலையத்தில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் உட்காரக்கூட இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் மற்றும் நகராட்சி உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பண்ருட்டி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நாளை 25ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று நகரின் முக்கிய வீதிகளில் "டாம் டாம் ' மூலம் நகராட்சி ஊழியர்கள் அறிவித்தனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 06:38
 

2 மாடி கட்டிட ஆக்ரமிப்பு மாநகராட்சி அதிரடி அகற்றம்

Print PDF

தினமலர் 23.02.2010

2 மாடி கட்டிட ஆக்ரமிப்பு மாநகராட்சி அதிரடி அகற்றம்

சேலம்: சேலம் குரங்குச்சாவடியில், மாநகராட்சி இடத்தை ஆக்ரமித்து கட்டியிருந்த, இரண்டு மாடி கட்டிடம் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது. சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் குரங்குச் சாவடி மெயின் ரோட்டில் உள்ளது. அந்த இடத்தில் சர்வீஸ் சாலை அமைப்பதென மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

சர்வீஸ் சாலை இடத்தை ஆக்ரமித்து, பாண்டவன் என்பவர் இரண்டு மாடி கட்டிடம் கட்டியிருந்தார். அதை அகற்ற மாநகராட்சி கமிஷனர் பழனிச்சாமி உத்தரவிட்டார். கட்டிட உரிமையாளருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மாநகராட்சி உதவி ஆணையர் நெப்போலியன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ், உதவிப் பொறியாளர்கள் சுப்ரமணி, பெட்சி ஞானலதா உட்பட அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றனர்.

அக்கட்டிடத்தின் நான்கடி ஆக்ரமிப்பை, நவீன இயந்திரங்களின் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்கள் படிப்படியாக இடித்து தள்ளும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக, சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:08
 

தியாகதுருகம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆய்வு

Print PDF

தினமலர் 22.02.2010

தியாகதுருகம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆய்வு

தியாகதுருகம் : தியாகதுருகம் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து டி.எஸ்.பி., யுடன் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர்.

தியாகதுருகம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப் புக்களை அகற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ஆறுமுகம், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆக்கிரமிப்புகள் உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். பஸ் நிலையம், நகரின் மையத்தில் செல் லும் தேசியநெடுஞ்சாலை, சந்தைமேடு ஆகிய இடங்களை பார்வையிட்டபின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது போதுமான பாதுகாப்பு வழங்கும்படி பேரூராட்சி சார்பில் டி.எஸ்.பி., ஆறுமுகத்திடம் துணைத்தலைவர் பொன்ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். பேரூராட்சி மன்ற கவுன் சிலர்கள் அபரஞ்சி, வேலு மணி, அலுவலக ஊழி யர்கள் ராஜி, சுகுமார், ராதாகிருஷ்ணன், சசி, கோவிந்தன் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 22 February 2010 06:34
 


Page 140 of 204