Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஸ்ரீரங்கம் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பரபரப்பு

Print PDF

தினமலர் 22.02.2010

ஸ்ரீரங்கம் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பரபரப்பு

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் சத்துணவு கூடம் கட்ட வேண்டிய இடம் ஆக்கிரமிக்கப்பட்டதை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவில் பம்பிங் ஸ்டேஷன் செயல்படுகிறது. இதன் அருகே சத்துணவு கூடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கி இருந்தது. ஆனால் அதே இடத்தில் அதே பகுதியை சேர்ந்த பூ வியாபாரி முருகேசன் என்பவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு அப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் மற்றும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சத்துணவு கூடம் கட்டும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை புல்டோசர் மூலம் இடித்து தள்ளினர். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்திய சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Last Updated on Monday, 22 February 2010 06:30
 

மன்னார்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 20.02.2010

மன்னார்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மன்னார்குடி, பிப். 19: மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மன்னார்குடி நடேசன் தெரு, நகர, புதிய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வர்த்தக நிறுவனத்தினர் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்களையும், போக்குவரத்துக்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை தானாகவே முன் வந்து அகற்றுமாறு நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் முன் வரவில்லை. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நகராட்சி ணையர் மதிவாணன், பொறியாளர் எ.முருகானந்தம் ஆகியோர் பார்வையிட்டனர். மன்னார்குடி காவல் ஆய்வாளர் மு.மணிமாறன் தலைமையில் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Saturday, 20 February 2010 10:28
 

ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

Print PDF

தினமலர் 20.02.2010

ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை : மதுரை குருவிக்காரன் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலுள்ள டாஸ்மாக் பார் அருகே ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ""குருவிக்காரன் சாலை பாலம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு டாஸ்மாக் பார் செயல்படுகிறது. அதை அகற்ற உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். வழக்கு நேற்று நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர், ""இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட போது, இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என, கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்,'' என்றார்.

மேலும் பார் அருகே ரோட்டோர ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தி.மு.., வட்ட செயலாளர் முத்து உட்பட 4 பேர் ஆக்கிரமிப்புகளை எடுப்பதாக அரசு வக்கீல் ஜானகிராமலு மூலம் தெரிவித்தனர். அதை பதிவு செய்த நீதிபதிகள்,""ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற,'' முதற்கட்டமாக உத்தரவிட்டனர். மேல் விசாரணையை பிப்., 24க்கு தள்ளிவைத்தனர்.

Last Updated on Saturday, 20 February 2010 06:38
 


Page 141 of 204