Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

காஞ்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 17.02.2010

காஞ்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெருவில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நாளை பிரம்மோற்சவம் துவங்க உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளும் படி அப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. நேற்று மாலை நகராட்சி ஊழியர்கள் திடீரென காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கினர்.அதைக் கண்டதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.காமாட்சியம்மன் கோவிலில் நாளை(18ம் தேதி) பிரம்மோற்சவம் துவங்க உள்ளது.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பொறுத்திருந்த அதிகாரிகள் பிரம்மோற்சவம் முடிந்த பின் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கலாம். தற் போது இடிபாடுகளை அகற்றாவிட்டால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவர் என்றனர்.இது குறித்து நகராட்சி ஊழியர்களை கேட்டபோது உடனடியாக இடிபாடுகளை அகற்றிவிடுவோம் என்றனர். ரயில்வே ரோடில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பல நாட்களாகியும் இடிபாடுகள் அகற்றப்படவில்லையே எனக் கேட்டபோது அதை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற வேண்டும் என்றனர்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:22
 

உக்கடத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 20 கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினமணி 16.02.2010

உக்கடத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 20 கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி


கோவை, பிப்.15: உக்கடம் பஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 20 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி (படம்) அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் அதிக கடைகள் இருப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆணையரின் உத்தரவின் பேரில், கோவை கோட்டாட்சியர் பாலசந்திரன், வட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாநகரக் காவல் துணை ஆணையர் பி.நாகராஜன், தெற்கு மண்டல உதவி ஆணையர் லட்சுமணன், நகரமைப்பு அலுவலர் செüந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு திங்கள்கிழமை சென்றனர்.

அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் இயந்திரங்களுடன் அதிகாரிகள் இடிக்கத் துவங்கினர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மொத்தம் 20 கடைகளை அதிகாரிகள் அகற்றினர். உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 05:49
 

பஸ் ஸ்டாண்டில் காலியான ஆக்கிரமிப்புகளால் நிம்மதி! உக்கடத்தில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர் 16.02.2010

பஸ் ஸ்டாண்டில் காலியான ஆக்கிரமிப்புகளால் நிம்மதி! உக்கடத்தில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

கோவை : உக்கடம் பஸ் ஸ்டாண்டில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 21 கடைகளை மாநகராட்சி நகரமைப்புத்துறையினர் நேற்று அப்புறப்படுத்தினர்.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான உக்கடம் பஸ்ஸ்டாண்டு "பி' கிரேடில் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும். "பி கிரேடு' அந்தஸ்திலுள்ள பஸ் ஸ்டாண்டிற்கு கழிப்பிடம், குடிநீர், சுகாதாரம், பயணிகள் அமர போதுமான இருக்கை என பல வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்தாலும் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. குடிநீர் குழாய் உடைப்பு, தொலைக்காட்சி பழுது, கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்தாமல் தவிர்ப்பது உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தது. அவை படிப்படியாக சரிசெய்யப்பட்டது.

கவுன்சிலர் , மேயர், துணைமேயர், சுகாதாரக்குழு தலைவர் சிபாரிசு என்ற பெயரில் உக்கடம் பஸ் ஸ்டாண்டின் உள் பகுதியில் ஒன்று இரண்டு என்று துவங்கி 21 கடைகள் முளைத்து விட்டன. பஜ்ஜி, போண்டா, பெட்டி, செல்போன், எஸ்.டி.டி., சி.டி., என கடைகள் முளைத்தன. ஏற்பட்ட வியாபார போட்டியால், பயணிகள் பொருட்களை வாங்கி செல்லவும், டீ, காபி, குளிர்பானங்களை சாப்பிட சொல்லி வற்புறுத்துவதும் தொடர்ந்தது. இது தொடர்பாக அடிக்கடி உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார்கள் சென்றன.கைகலப்பு, தகராறுகளும் அரங்கேறின. உக்கடம் போலீசிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடைகளை அகற்ற பரிந்துரை கடிதம் அனுப்பினர். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கடைகளை அப்புறப்படுத்திக்கொள்ள நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், யாரும் கடையை காலிசெய்ய முன்வரவில்லை. மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமையில் நேற்று உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 21 கடைகளை அப்புறப்படுத்தினர். கடை நடத்த மாநகராட்சி அனுமதி பெற்ற இரு தொலைபேசி மையங்கள், டேன் டீ, பனைவாரியம், ஆவின், பி.எஸ்.என்.எல்., ஆகிய ஆறு கடைகளும், கோர்ட்டிலிருந்து இடைக்கால தடை பெற்றிருந்த மூன்று கடைகள் தவிர அனைத்து கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. "பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் உக்கடம் பஸ் ஸ்டாண்டிற்குள் யாரும் கடை வைக்கக்கூடாது' என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated on Tuesday, 16 February 2010 02:20
 


Page 144 of 204