Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விளம்பரப் பலகைகள்

Print PDF

தினமணி 12.02.2010

விளம்பரப் பலகைகள்

அகற்ற குழு

சேலம் மாநகரில் நீண்ட நாள்களாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை அகற்ற விரைவிóல் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மாநகரில் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பும், நிகழ்ச்சி முடிவடைந்த 3 நாள்கள் வரையிலும் மட்டுமே விளம்பரப் பலகைகள் வைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாநகர் முழுவதும் பல இடங்களில் அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள், பேனர்கள் மாதக் கணக்கில் அகற்றப்படாமல் இருந்து வருகின்றன.

இவற்றை அகற்ற வேண்டும் என்று கடந்த சில நாள்களுக்கு முன்னர் அதிமுகவினர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர். இருப்பினும் பேனர்கள் எதுவும் இதுவரை அகற்றப்படவில்லை. இது குறித்து டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி கூறியது:

மாநகரிóல் வைக்கப்படும் பேனர்களால் மாநகராட்சிக்கு வருவாய் எதுவும் கிடைப்பதில்லை. பேனர்கள் வைப்பதற்கு போலீஸôரும், மாநகராட்சியுமே இணைந்து அனுமதி வழங்கி வருகின்றன. ஆனால் பெரும்பாலும் அனுமதி பெறாமலேயே பேனர்கள் வைக்கப்படுகின்றன.

இப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகர போலீஸôருடன் கலந்து பேசி விரைவில் ஒரு குழு அமைக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து அனுமதி பெறாமல், விதிகளுக்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படும் என்றார் அவர்.

Last Updated on Friday, 12 February 2010 11:11
 

சூளைமேடில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி 12.02.2010

சூளைமேடில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சூளைமேடு நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள். சென்னை, பிப். 11: சூளைமேடு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலையில் ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.

பொது மக்களிடமிருந்து தொடர் புகார்கள் வந்ததையடுத்து சூளைமேடு நெடுஞ்சாலை மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாலையில் 3 அடி தூரத்துக்கு சாலையை ஆக்கிரமித்து சாய்வு தளம் மற்றும் பழம், பாக்கு கடைகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 250 கடைகள் இதுபோல் சாலையை ஆக்கிரமித்திருந்தன.

ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 50 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். ராயப்பேட்டை பாரதி சாலையில் குஷன் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும் என்று மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 12 February 2010 11:58
 

வாலாஜாவில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 12.02.2010

வாலாஜாவில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்

வாலாஜாபேட்டை : வாலாஜாபேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மீண்டும் நேற்று தொடங்கினர்.

வாலாஜாபேட்டை நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் பல ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த மாதம் 21ம் தேதி நகராட்சி, போலீஸ், வருவாய்த்துறை உதவியுடன் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். இதைத்தொடர்ந்து, போலீஸ் அமைத்த நகர நலக்குழுவின் மூலம் நடைபாதைகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் பொருட்டு "பேரிகாட்' அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநில தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான

அணைக்கட்டு ரோடில் பல ஆண்டுகளாக அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்து வருவதாகவும், விபத்துகள் அப்பகுதியில் ஏற்பட்டு உயிர்சேதம் நடப்பதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில் அப்பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள், வீடுகள் ஆகிய பகுதியில் ஆக்கிரமித்து கட்டியுள்ள சுற்றுச்சுவர் மற்றும் மேல்சுவர் பகுதிகளை புல்டோசர் மூலம் அதிரடியாய் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
இதனால் குறுகலாக காட்சி அளித்த அந்த சாலை இப்போது விசாலமாக தெரிகிறது. மேலும் காணாமல் மறைந்து கிடந்த கழிவுநீர் கால்வாயும் இப்போது வெ ளியில் தலைகாட்டியுள்ளது. இதன் காரணமாக சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் உட்பட பல கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இப்போது சிரமமின்றி செல்லலாம். இப்பகுதியில், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Friday, 12 February 2010 07:40
 


Page 145 of 204