Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை அகற்றப்படும்

Print PDF

தினமணி 10.02.2010

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை அகற்றப்படும்

மதுரை
, பிப்.9: மதுரை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி அனுமதியின்றி பல்வேறு இடங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சாலைகளின் ஓரங்களில் இரும்புக் கம்பிகள் மூலமும், பஸ் நிறுத்தங்களின் அருகில் எனப் பல்வேறு இடங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதை உடனடியாக அகற்றிக்கொள்ளும்படி தனியார் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற விளம்பரதாரர்கள் அனுமதி எண் மற்றும் உரிமையாளர் பெயர் விவரத்தை விளம்பரப் பலகையில் குறிப்பிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, மதுரை மாநகராட்சிக்குப் பாத்தியப்பட்ட கடைகள், கழிப்பறை, மார்க்கெட்டுகள், சந்தைகள் போன்ற இடங்களில் மாநகராட்சி வழங்கிய அனுமதி உத்தரவு எண் மற்றும் உரிமையாளர் பெயர் பலகை கடையின் முன் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும்.

இன்னும் பெயர்ப்பலகை வைக்கப்படாத கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடையைப் பூட்டி மாநகராட்சி பொறுப்பு எடுத்துக் கொள்ளப்படும். மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி கடை வைக்கப்பட்டுள்ள கடைகள் உடனடியாக அகற்றப்படும்.

Last Updated on Wednesday, 10 February 2010 11:50
 

மாநகராட்சி கலந்துரையாடல் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

Print PDF

தினமணி 10.02.2010

மாநகராட்சி கலந்துரையாடல் கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

மதுரை, பிப்.9: மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுகர்வோர் அமைப்பு, மகளிர் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தின்போது பழங்காநத்தம் முதல் பாத்திமா கல்லூரி வரையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு மாநகராட்சி துணை ஆணையர் சு.சிவராசு தலைமை வகித்தார்.

உதவி ஆணையர் (வருவாய்) ரா.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தின்போது, பழங்காநத்தம் முதல் பாத்திமா கல்லூரி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கை, பழுதடைந்த முக்கிய பகுதி சாலைகளைச் செப்பனிடுதல். தெருக்களில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தல்.

தெருக்களில் திரியும் நாய்களைப் பிடித்தல், பள்ளிகளின் முன்பாக விற்கப்படும் ஈ மொய்க்கும் தின்பண்டங்கள் விற்பதைத் தடை செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் சிவராசு தெரிவித்தார்.

கூட்டத்தில் கூடல்நகர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 10 February 2010 11:25
 

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 09.02.2010

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருக்கோவிலூர், பிப். 8: தினமணி செய்தி எதிரொலி காரணமாக திருக்கோவிலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

÷திருக்கோவிலூரில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் வியாபார நிறுவனங்கள் இவ்வூரை திக்குமுக்காட செய்கின்றன.

÷வியாபாரிகள் அடாவடித்தனத்தால் பஸ் நிலையத்தில் இருந்து மக்கள் பெருமாள் கோயில் செல்வதற்குள் மூச்சு முட்டிவிடும் அளவுக்கு நெரிசல் நிலவுகிறது. அதோடு வியாபாரிகள் தங்களுடைய கடைக்குள் மட்டும் வியாபாரம் செய்யாமல் எதிரில் உள்ள சாலையை ஆக்கிரமித்து அதை வாடகைக்கு விட்டு சாலையிலேயே கடைகளை பரப்பி உள்ளதால் பாதசாரிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

÷நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மேலும் வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்நகரத்தில் மக்கள் அதிகம் கூடுகிற இடங்களில் சாலையிலேயே மிகப் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்கள் அரசியல்வாதிகளால் வைக்கப்படுகிறது.

÷இத்தகைய டிஜிட்டல் பேனர்கள் மக்களை அச்சுறுத்துவதோடு ஒரு சில இடங்களில் கடைகளை மறைத்து வைத்துள்ளதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் குமுறுகின்றனர்.

÷இதுமட்டுமின்றி ஒரு சில டிஜிட்டல் பேனர்கள் கீழே சரிந்து விழுந்து மின் கம்பிகளை அறுத்து மக்களுக்கு பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் எந்தவொரு விளம்பர பேனர்களாக இருந்தாலும் 3 நாள்களுக்கு மேல் வைக்கக்கூடாது என அரசு உத்தரவு இருந்தும் காவல் துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.

÷இதனால் அன்றாடம் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலில் இப்பகுதி மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் பஸ்ûஸ இயக்குவதற்கும் சிரமம் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்துக்கு தங்களது பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

÷இந்நிலையில் இப்பகுதியில் சாலையையொட்டி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்றவும், பஸ் நிலையத்தில் தாறுமாறாக சுற்றித்திரியும் தள்ளுவண்டிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், நடைபாதை ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று ஜனவரி 14-ம் தேதி தினமணி நாளிதழில் நெரிசலில் சிக்கித் தவிக்கும் திருக்கோவிலூர் என்ற தலைப்பில் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்தது.

÷தினமணி செய்தி எதிரொலி காரணமாக நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, காவல்துறை, பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில் திருக்கோவிலூர் நகரப் பகுதி முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன.÷அதில் முதல் கட்டமாக திருக்கோவிலூர் நகரப்பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

 


Page 147 of 204