Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

15 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி

Print PDF

தினமணி 02.02.2010

15 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி

சென்னை, பிப். 1: தியாகராயநகரில் சாலையை ஆக்கிரமித்திருந்த 15 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அதிரடியாக அகற்றினர்.

சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில், தியாகராயநகரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

தியாகராயநகர் பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள மேட்லி சாலை, கில்டு சாலை, நடேசன் சாலை, முத்துரங்கம் சாலை ஆகிய பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்தும், நடைபாதையிலும் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பகுதியை மேயர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அப்போது மேட்லி சாலையில் 5 துரித உணவகங்கள், நடேசன் சாலையில் 4 துரித உணவகங்கள், ஒரு டீ கடை, சிப்ஸ் கடை, குளிர்பானக் கடை ஆகியனவும், கில்டு சாலையில் ஒரு துரித உணவகமும், முத்துரங்கம் சாலையில் 2 துரித உணவகங்களும் நடைபாதைகளை ஆக்கிரமித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்த இந்தக் கடைகளை உடனடியாக அகற்றுமாறு, அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்தக் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. கில்டு சாலையில் குவிந்திருந்த குப்பைகளும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

மாநகராட்சிக்கு வரி நிலுவை: ஒரே நாளில் ரூ.60 லட்சம் வசூல்

மதுரை, பிப்.1: மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை ஒரே நாளில் ரூ.60 லட்சம் வசூலானதாக ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநகராட்சி வரி இனங்களான சொத்து வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை வரிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளவற்றை வசூலிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு குழுவுக்கு 2 வார்டுகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெற்கு மண்டலத்தில் 25 இணைப்புகள், மேற்கு மண்டலத்தில் 15 இணைப்புகள், வடக்கு மண்டலத்தில் 25 இணைப்புகள், கிழக்கு மண்டலத்தில் 10 இணைப்புகள் என மொத்தம் 75 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதேபோல வாடகை செலுத்தாத கடைகளுக்குப் பூட்டு போடப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.60 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. எனவே வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக அவற்றை செலுத்தி மாநகராட்சியின் நடவடிக்கையைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated on Tuesday, 02 February 2010 10:14
 

பார்க்கிங் பகுதியில் கடைகள் 24 மணி நேரத்தில் அகற்ற கெடு

Print PDF

தினமலர் 02.02.2010

பார்க்கிங் பகுதியில் கடைகள் 24 மணி நேரத்தில் அகற்ற கெடு

கோவை : தனியார் வணிக வளாகத்தில் வாகன பார்க்கிங் பகுதியை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.சாயிபாபாகாலனி, என்.எஸ்.ஆர்.,ரோடு, மணியம் வேலப்பர் வீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இதன் முன்பகுதி வாகன பார்க்கிங் இடத்தில் மொபைல் போன் கடை, புத்தக கடை, பொக்கே ஷாப் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

பார்க்கிங் பகுதியிலுள்ள கடைகளை அகற்ற, மாநகராட்சி நகரமைப்பு துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது; எனினும், கடைகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

வாகன பார்க்கிங் பகுதியில் இருந்த கடைகளை அகற்றும் நடவடிக்கையை துவக்கினர். இதையடுத்து, மாநகராட்சி கமிஷனரிடம், கடை உரிமையாளர் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில், இடித்து அப்புறப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு நாள் கால அவகாசத்தில் மீதமுள்ள பகுதியை தாங்களாகவே அகற்றிக்கொள்வதாக கடை உரிமையாளர் உறுதி அளித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், ""24 மணி நேரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக்கொள்ளாவிடில் இடித்து அகற்றப்படும்,'' என்றார்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:40
 

மாநகராட்சி அதிரடி நடவடிக்கை: தினமலர் செய்தி எதிரொலி

Print PDF

தினமலர் 02.02.2010

மாநகராட்சி அதிரடி நடவடிக்கை: தினமலர் செய்தி எதிரொலி

சென்னை: தினமலர் செய்தி எதிரொலியால், தி.நகர் பகுதியில் சென்னை மேயர் அதிரடிச் சோதனை மேற்கொண்டு, சுகாதார கேடு ஏற்படுத்திய, 15 நடைபாதைக் கடைகளை அகற்றவும், மூடவும் உத்தரவிட்டார்.

"தி.நகர் சிவா - விஷ்ணு கோவில் அருகில், பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் கழிவுகள் போடப்பட்டுள்ளன' என்று, "தினமலர்' நேற்று படத்துடன் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மேயர் சுப்ரமணியன், நேற்று காலை கோடம்பாக்கம் மண்டல அலுவலர் ஞானமணியுடன் சென்று, தி.நகர் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். மேட்லி சாலையில் ஐந்து துரித உணவகங்கள், நடேசன் சாலையில் நான்கு துரித உணவகங்கள், ஒரு தேநீர் விடுதி, ஒரு சிப்ஸ் கடை மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவைகளையும், கில்டு சாலையில் செயல்பட்ட ஒரு துரித உணவகமும், முத்துரங்கன் சாலையில் இரண்டு துரித உணவகங் களும் நடைபாதைகளை ஆக்கிரமித்து இருப்பதை அறிந்து, உடனடியாக அந்த கடைகளை அகற்ற, மண்டல அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், இறைச்சிக் கழிவுகளை போட்டு, சுகாதார கேடு ஏற்படுத்தியதோடு, போக்குவரத்து இடையூறும் ஏற்படுத்தியதற்காக, அந்த கடைகளை மூடும்படி, மேயர் உத்தரவிட்டார். கில்டு சாலையில் குவிந்திந்த குப்பைகள் மற்றும் கழிவுகள், மேயர் முன்னிலையிலேயே அகற்றப்பட்டன.

Last Updated on Tuesday, 02 February 2010 06:15
 


Page 152 of 204