Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

சாலை விரிவாக்கம்: மாநகராட்சிக்கு சொந்தமான 32 கடைகளை இடிக்க முடிவு

Print PDF

தினமணி 28.01.2010

சாலை விரிவாக்கம்: மாநகராட்சிக்கு சொந்தமான 32 கடைகளை இடிக்க முடிவு


திருப்பூர், ஜன.27: சாலை விரிவாக்கத்தையொட்டி திருப்பூர் காமராஜர் சாலையில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான 32 கடைகளையும் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளதை அடுத்து குத்தகைதாரர்கள் கடைகளை காலி செய்துள்ளனர்.

பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த திருப்பூர் மாநகரிலுள்ள பிரதான சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, அவிநாசி சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட சாலைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநரின் மையப் பகுதியான பழைய பஸ் நிலையத்தையொட்டியுள்ள காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பழைய பஸ் நிலையம் வெளிப்புற நுழைவுவாயிலில் இருந்து பிள்ளையர் கோயில் வரையிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 32 கடைகளை இடிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு, அக்கடைகளை காலி செய்து கொடுக்கும்படி ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து, அக்கடைகளை இந்த ஆண்டு குத்தகை விடுவதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், காமராஜர் சாலையை விரிவுபடுத்துவதற்காக திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான 32 கடைகளையும் இடிக்க மாமன்ற ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அக்கடைகளை காலி செய்து கொடுக்கும்படி குத்தகைதாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. ÷இதையடுத்து, பெரும்பாலான கடைகளை குத்தகைதாரர்கள் தற்போது முழுமையாக காலி செய்துள்ளனர். இதனால், அப்பகுதி கடைகள் அனைத்தும் புதன்கிழமை மூடப்பட்டிருந்தன.

முழுமையாக அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்ட பின்னர் 32 கடைகளையும் இடித்து நெடுஞ்சாலைத்துறை வசம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 28 January 2010 10:08
 

சாலை மேம்பாட்டு திட்டத்தில் ஆக்ரமிப்பு அகற்றும் பணிச்

Print PDF

தினமலர் 22.01.2010

சாலை மேம்பாட்டு திட்டத்தில் ஆக்ரமிப்பு அகற்றும் பணிச்

பள்ளிபாளையம்: சாலை சந்திப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிபாளையத்தில் சாலையோர ஆக்ரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். பள்ளிபாளையத்தில் சாலை சந்திப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட், ஈரோடு சாலை, திருச்செங்கோடு, சங்ககிரி சாலை ஆகிய பகுதியில் ஆக்ரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப் படுகின்றன. அதில் நேற்று திருச்செங்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மனோகரன் மேற்பார்வையில் சங்ககிரி சாலையில் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட கடைகள், சாக்கடை உள்ளிட்டவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சேகர், பள்ளிபாளையம் துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர.

Last Updated on Friday, 22 January 2010 07:50
 

ராசிபுரம் நகராட்சியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்: கமிஷனர்

Print PDF

தினமலர் 22.01.2010

ராசிபுரம் நகராட்சியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்: கமிஷனர்

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்பு அனைத்தும் இன்று அகற்றப்படும்' என, நகராட்சி கமிஷனர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நாமக்கல் சாலை, சேலம் ரோடு, அண்ணாசாலை, கடைவீதி, தேரடித் தெரு, சின்னகடைவீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்பு, பேனர், விளம்பர தட்டி ஆகியவற்றை சம்மந்தப்பட்டோர் தாமாக முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் வருவாய், நெடுஞ்சாலைத்துறை, போலீஸார் ஒத்துழைப்புடன் நகராட்சி முலம் ஜனவரி 22ம் தேதி ஆக்ரமிப்பு அனைத்தும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றப்படும் பொருட்கள் எக்காரணத்தை கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 22 January 2010 07:46
 


Page 154 of 204