Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ரோட்டை ஆக்கிரமித்த கடைக்காரர்களுக்கு அபராதம்

Print PDF

தினமலர் 20.01.2010

ரோட்டை ஆக்கிரமித்த கடைக்காரர்களுக்கு அபராதம்

சிவகாசி:சிவகாசி நகராட்சி சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆய்வாளர்கள் மாரியப்பன், பாலகிருஷ்ணன், தவிட்டுராஜா அடங்கிய குழுவினர் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, சிவன்மாட வீதி, ரத வீதிகள், புதுரோட்டு தெரு, சாத்தூர் ரோடு, காமாக் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூராக வியாபாரம் செய்த 30 பேர் மீதும், பிளாஸ்டிக் கப் பயன்படுத்தி சாக்கடை வாறுகாலில் தூக்கி வீசி சுகாதார கேட்டை ஏற்படுத்திய 25 பேருக்கும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 10:29
 

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு

Print PDF

தினமணி 20.01.2010

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு

ராசிபுரம், ஜன.19: ராசிபுரம் நகராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றிக்கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராசிபுரம் நகராட்சி பகுதிக்குட்பட்ட அண்ணா சாலை, நாமக்கல் சாலை, தேரடிச் சாலை, கடை வீதி, சின்னக்கடை வீதி போன்ற பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், பேனர்கள், விளம்பரத் தட்டிகள் போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் அப்புறப்படுத்திக் கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில், வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளின் ஒத்துழைப்போடு நகராட்சி மூலம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அவ்வாறு அகற்றப்படும் பொருட்கள் திருப்பித் தரமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated on Wednesday, 20 January 2010 06:28
 

மாநகராட்சி இடத்தில் உள்ள தனியார் மதுக்கடை பாரை அகற்றக் கோரும் மனு: ஆணையர் பதிலளிக்க உத்தரவு

Print PDF

தினமணி 09.01.2010

மாநகராட்சி இடத்தில் உள்ள தனியார் மதுக்கடை பாரை அகற்றக் கோரும் மனு: ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜன.18: மதுரை குருவிக்காரன் சாலையோரம் மாநகராட்சி இடத்தில் நடக்கும் தனியார் மதுக் கடை பாரை அகற்றி இடத்தைக் கையகப்படுத்தக் கோரிய மனுவுக்கு மாநகராட்சி ஆணையர் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

குருவிக்காரன் சாலை பாலத்தின் அருகே மாநகராட்சி ஆணையர் பெயரில் 25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் கட்டடம் கட்டி மதுபான பார் நடத்தி வருகின்றனர். மேலும் காலி இடத்தில் மணல், செங்கல் வியாபாரம் நடைபெறுகிறது.

இந்த நிலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ததில், இந்த இடம் மாநகராட்சி ஆணையர் பெயரில் உள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமானது என நகரமைப்புத் திட்ட தலைமை அதிகாரி பதில் அளித்துள்ளார்.

பார் நடைபெறுவது குறித்தும், அதை மாநகராட்சி கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர், ஆட்சியர், தலைமைச் செயலர் ஆகியோருக்குப் பல மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த இடத்தில் மதுபானக் கடை மற்றும் பார் உள்ளதால் ரெüடிகள் தொந்தரவு, வழிப்பறிச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. எனவே, இந்த பாரை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், எம்.ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இது குறித்து மாநகராட்சி ஆணையர், டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர், ஆட்சியர் ஆகியோர் பதில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்

Last Updated on Tuesday, 19 January 2010 11:18
 


Page 156 of 204