Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 08.01.2010

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம், ஜன.7: விழுப்புரம் நேருஜி சாலையில், சிக்னல் முதல் ரயில் நிலையம் வரை இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகாட்சி அலுவலர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றினர்.

இச் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுவதால் கடைகளின் முன் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், பந்தல், நடைமேடை ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

நகராட்சி ஆணையர் சிவகுமார், நகரஅமைப்பு அலுவலர் நாச்சிமுத்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சேகர், போக்குவரத்து ஆய்வாளர் சு. செல்வராஜன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் நாகராஜன், உதவிப் பொறியாளர்கள் மகாலட்சுமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Last Updated on Friday, 08 January 2010 10:21
 

கம்பத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

Print PDF

தினமலர் 08.01.2010

கம்பத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

கம்பம் : கம்பம் நெடுஞ் சாலை ரோட்டில் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த ஒரு ஏக்கர் நிலம் மீட்கப்பட் டுள்ளது.கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை ரோட்டில் கடந்த இரண்டு தினங்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. கடைகள், குடியிருப்பு, அரசு அலுவலகம், கோயில்கள் பராபட்சமின்றி அகற்றப்பட்டன. கம்பம் நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் கூறுகையில்; கம்பம் மெயின் ரோட்டில் 228 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப் பட்டன. ஆக்கிரமிப்பில் இருந்த 18 கோயில்கள், 30 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 15 இடங்களில் பெருமளவில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. கம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட அக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையில் ஒரு ஏக்கர் அரசு இடம் மீட்கப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Friday, 08 January 2010 07:57
 

விழுப்புரம் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 08.01.2010

விழுப்புரம் நேரு வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நேரு வீதியில் அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்று துவங்கியுள்ளது. விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலை, நேரு வீதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அமைச்சர் பொன்முடி உத் தரவின் பேரில் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

விழுப்புரம் நேரு வீதியில் நீண்ட நாட்களுக்கு பின் நேற்று அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் மகாலட்சுமி, நகராட்சி கமிஷ னர் சிவக்குமார் மேற் பார்வையில் பொக்லைன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்று துவங்கியது. இன்ஸ்பெக்டர்கள் சேகர், போக்குவரத்து பிரிவு செல்வராஜ், சப் இன்ஸ் பெக்டர்கள் ஏழுமலை, ஆனந்து, சரஸ்வதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழுப்புரம் சிக்னல் பகுதியில் துவங்கி பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தது. கடைகளுக்கு முன் இருந்த போர் டுகள், ஆக்கிரமிப்பு கான்கிரீட் கட்டைகள், பைப்புகள், அரசு அலுவலகத்திற்கு வைத்திருந்த போர்டுகளும் அதிரடியாக அகற்றப் பட்டது. முன்னதாக ஆக்கிரமிப் புகள் அகற்றப்படுவதற்கு முறைப்படி நோட் டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவார்களா என்ற சந் தேகத்தில் இருந்த கடைகாரர்கள் நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துவங்கியதும் அவசர அவசரமாக போர் டுகள், வெளியே நீட்டி வைத்திருந்த பெயர் பலகைகளை அகற்றினர். பழைய பஸ் நிலையம் எதிர் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது. பழைய பஸ் நிலையம் முன் பெரிய ஆக்கிரமிப்புகளாக இருந்த பிளாட்பாரக் கடைகள், தட்டிகள் அகற்றப்பட்டது. சாலையில் மண் மேடுகள் வைத்து ஆக்கிரமித்திருந்ததையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி கவுன்சிலர் ஒருவர் முறையிட்டதைத் தொடர்ந்து. மண் குவியல் களும் அகற்றப்பட்டது.

நேற்று ஒரு புறம் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சாலை நல்ல இடவசதிகளுடன் காணப்பட்டது. அமைச்சர் உத்தரவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்புகளின்றி நடவடிக்கைகள் தொடர்ந்தது. தொடர்ந்து நகர எல் லையான மகாராஜபுரம் வரை இருபுறமும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்ற உள்ளதாகவும், ஆக்கிரமிப்பா ளர்கள் தாமாகவே முன் வந்து எடுத்துக் கொண் டால் சேதத்தை தவிர்க்கலாம், இல்லையெனில் ஆக்கிரமிப்பு உபகரணங் கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Last Updated on Friday, 08 January 2010 07:54
 


Page 159 of 204