Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் கெடு

Print PDF

தினமலர் 05.01.2010

ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் கெடு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்திற்குள் அகற்றி விட வேண்டும் என்று நகராட்சி தலைவர் சிவபிரகாசம் அறிவித்துள்ளார். புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பூக்கடை மார்க்கெட் பகுதிகளில் நிரந்தர கட்டடம் கட்டி, ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை ரோட்டில் கட்டடங்கள் கட்டி நிரந்தர ஆக்கிரமிப்புகள் செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக உள்ளது. பூக்கடை பஜாரில் அனுமதிக்கப்பட்ட கடை அளவை விட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் நெடுஞ்சாலை துறை, போலீஸ் மற்றும் நகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Last Updated on Tuesday, 05 January 2010 07:04
 

ரோடுகளை ஆக்கிரமித்து விளம்பர போர்டுகள் : பொள்ளாச்சியில் அதிரடியாக அகற்றம்

Print PDF

தினமலர் 04.01.2010

ரோடுகளை ஆக்கிரமித்து விளம்பர போர்டுகள் : பொள்ளாச்சியில் அதிரடியாக அகற்றம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரப்பகுதியில், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பர பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றி வருகின்றனர்.

பொள்ளாச்சி நகரப்பகுதியில், மக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களான, பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, தேர்நிலை, காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில், தனியார் மற்றும் அரசியல் கட்சி விளம்பர பிளக்ஸ் பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. "மெகா' சைஸ்சில் வைக்கப்படும் பேனர்களால், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற கோரி, போலீசார், வருவாய் துறை, நகராட்சி அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில், நகரப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பர பேனர்களை, நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றி வருகின்றனர். அதேசமயம், அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற போலீசாரின் அனுமதி தேவையாக இருப்பதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், தனியார் மற்றும் அரசியல் கட்சி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நகரப்பகுதியில், விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்க நகராட்சியிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல், பஸ்ஸ்டாண்ட், காந்திசிலை, உடுமலை ரோடு, கோவை ரோடு பகுதிகளில் வைக்கப்பட்டிருந் தனியார் பிளக்ஸ் பேனர்கள் முதல்கட்டமாக அகற்றப்பட்டுள்ளன. இதில், 25 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

நேற்றும், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 10 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. நகரப்பகுதியில், அரசியல் கட்சிகளின் பேனர்கள் உள்ளன. அவற்றை போலீசார்தான் அகற்ற வேண்டும். நகராட்சி சார்பில் அகற்ற வேண்டுமானால், பேனர்களை அகற்றும் போது பிரச்னைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தரப்பில் அனுமதி அளித்தப்பின், நகராட்சி ஊழியர்கள் மூலம், அரசியல் கட்சி பேனர்களும் அகற்றப்படும். இவ்வாறு, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பேனர்கள் அகற்றம்

Print PDF

தினமலர் 24.12.2009

பேனர்கள் அகற்றம்

உடுமலை : உடுமலையில், விதிமுறையை மீறி வைக்கப்பட்டிருந்த "ப்ளக்ஸ்' பேனர்கள் அகற்றப்பட்டன.உடுமலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு ஆகிய இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் சார்பில் "ப்ளக்ஸ்' போர்டுகள் வைக்கப்படுகின்றன.ரோட்டின் வளைவு பகுதியை பேனர்கள் மறைத்துக் கொள்வதால், வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.

Last Updated on Thursday, 24 December 2009 09:36
 


Page 162 of 204