Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு திட்டக்குடி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு

Print PDF

தினகரன் 24.12.2009

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு திட்டக்குடி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு

திட்டக்குடி: திட்டக்குடி பேரூராட்சியில் உள்ள சிவன்கோயில் வீதி, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து கடலூர் பேரூராட்சி உதவி இயக்குநர் சடையப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் குளம் தூர் வாரும் பணி மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பேரூராட்சி உதவி இயக்குநர் சடைப்பன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சியில் வருவாய் ஆதாரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண் டார். செயல் அலுவலர் பன்னீர்செல்வம், உதவி செயற்பொறியாளர் முருகேசன், கவுன்சிலர்கள் ராஜஅலெக்ஸ்சாண்டர், செந்தில், செல்வம், செந்தில்குமார், வசந்தாதுரைசாமி உட்பட பலர் உடனிருந்தனர். அப்போது அவரிடம் கவுன்சிலர் செந்தில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் காந்தி மைதானத்தில் பூங்கா அமைக்க கூடாது. கோயில் திருவிழா காலங்களில் காந்தி மைதானம் பயன்படுத்தப்படும் என மனு அளித்தார். இது குறித்து பரிசிலினை செய்யப்படும் என உதவி இயக்குநர் உறுதியளித்தா

Last Updated on Thursday, 24 December 2009 06:15
 

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி 23.12.2009

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளுக்கு சீல்

சென்னை, டிச. 22: சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த 12 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

சென்னையில் வார்டு 152}ல் துர்காபாய் தேஷ்முக் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 32 பழக்கடைகளும், 14 பூ கடைகளும் இயங்கி வந்தன.

இவற்றில் சில கடைகள் சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்தன.

அப்பகுதியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 12 கடைகளுக்கு சீல் வைத்தனர்

 

தாராபுரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 23.12.2009

தாராபுரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாராபுரம், டிச.22: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு அடுத்தபடியான பெரிய நகரம் தாராபுரமாகும்.இந்நிலையில் நகராட்சிக்குச் சொந்தமான பகுதிகளில் ஏராளமானோர் ஆக்கிரமிப்புகளைச் செய்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து தாராபுரத்தில் நகராட்சிப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி ஆணையர் எஸ்.துரை உத்தரவின்பேரில், நகராட்சிப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தாராபுரம்-உடுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில், பல்லாண்டுகளாகச் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

சில இடங்களில் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானரவி தலைமையிலான போலீஸôர், பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Wednesday, 23 December 2009 09:28
 


Page 163 of 204