Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 04.12.2009

நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருநெல்வேலி, டிச. 3: திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருநெல்வேலி நகரம் மேலரத வீதியில் செல்லும் கழிவுநீர்க் கால்வாயை சில கடைகள் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன. இதனால், கால்வாயில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதற்கு அப்போது வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை மாநகராட்சி ஊழியர்கள் அங்கு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இப் பணியில் சுமார் 20 ஊழியர்கள் பொக்லைன் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் 4 இடங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 12 கடைகள் அகற்றப்பட்டன.

 

ஜார்ஜ் டவுனில் பூக்கடைகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினமணி 03.12.2009

ஜார்ஜ் டவுனில் பூக்கடைகளை அகற்ற உத்தரவு

சென்னை, டிச.2: சென்னை ஜார்ஜ்டவுனில் உள்ள பட்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ வியாபார கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள சில்லறை பூ வியாபாரிகள் நல சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் ஆகியோர் ஜார்ஜ்டவுன் பட்ரியன் தெருவில் பூ வியாபரம் செய்வதில் தலையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டது. சென்னை கோயம்பேடு மொத்த பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோயம்பேடு வணிக வளாகத்தைத் தவிர சென்னை மாநகரத்தின் பிற இடங்களில் மொத்த பூ வியாபாரக் கடைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பட்ரியன் தெருவில் 138 மொத்த பூ வியாபாரக் கடைகளை அகற்ற வேண்டும் என்று வேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2001-ம் ஆண்டிலேயே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பூ வியாபாரிகள் இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடையை 2004-ம் ஆண்டு பெற்றுள்ளனர்.

ஆனால், அந்தத் தடையை நீக்க இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்ரியன் தெருவில் தற்போதும் மொத்த பூ வியாபாரம் நடைபெற்றால், அந்தக் கடைகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

அதேபோல், பட்ரியன் தெருவில் உள்ள சில்லறை வியாபாரப் பூக்கடைகளை அகற்றுவதற்கு முன்பு அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 03 December 2009 09:42
 

போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 02.12.2009

 


Page 170 of 204