Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கடையநல்லூர் பாப்பான்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு

Print PDF

தினமணி 10.11.2009

கடையநல்லூர் பாப்பான்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு

கடையநல்லூர்
,நவ.9: கடையநல்லூர் பாப்பான்கால்வாய் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

÷கடையநல்லூர் நகராட்சி மங்கம்மாள் சாலையில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணி மற்றும் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆட்சியர் ஜெயராமன் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டார். ÷

அப்போது பாப்பான்கால்வாய் பகுúúதிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் கால்வாயின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ÷ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அவர்களை சஸ்பெண்ட் செய்யவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

÷ஆட்சியருடன் தென்காசி கோட்டாட்சியர் மூர்த்தி, வட்டாட்சியர் பரமசிவன், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், ஆணையர் (பொ) அய்யனார், உதவிப் பொறியாளர் முகைதீன், வருவாய் ஆய்வாளர் ஆதிநாராயணன் உள்ளிட்டோர் சென்றனர். ஆட்சியரின் உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள்:

கடந்த மாதத்தில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை விரிவாக்கக் கட்டடத்தை தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

÷அதற்கு சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனை விரிவாக்க கட்டடத்தை பார்வையிட்ட ஆட்சியர் ஜெயராமன் மருத்துவமனை அருகேயுள்ள பாப்பான்கால்வாய் பகுதியிலிருந்த செடி, மரங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அந்த மரங்கள் அகற்றப்படாதது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Tuesday, 10 November 2009 07:37
 

கோவை நகரில் குளத்தில் குடிசைகள் அகற்றம்

Print PDF

தினகரன் 08.11.2009

 

விக்டோரிய ஹாலை சுற்றியிருந்து ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 07.11.2009

 


Page 178 of 204