Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

சிவகாசியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

Print PDF
தினமணி        30.03.2013

சிவகாசியில் மீண்டும் ஆக்கிரமிப்பு


சிவகாசியில் கடந்த புதன்கிழமை போக்குவரத்துக்கு  இடையூறாக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

சிவகாசி என்.ஆர்.கே.ஆர். வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில்  கடைக்காரர்கள் நடைபாதை வரை பொருள்களை வைத்து ஆக்கிரமித்திருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடும்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றிய மறுநாளே என்.ஆர்.கே.ஆர். வீதியில்  போக்குவரத்துக்கு இடையூறாக பண்டல்கள் வைக்கப்பட்டிருந்தன.  ஆகவே நகராட்சி நிர்வாகம் தொடந்து கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். அதேபோல, கடந்த மாதம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் நலன் கருதி இந்த ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

66வது வார்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Print PDF
தினகரன்     27.03.2013

66வது வார்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


கோவை: கோவை 66வது வார்டில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. கோவை மாநகராட்சி சார்பில், 66வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று சிறப்பு தூய்மை பணி நடந்தது. கண்ணபிரான் மில் சாலையில் நடந்த தூய்மை பணியை மேயர் செ.ம.வேலுசாமி பார்வையிட்டார். கண்ணபிரான் மில் சாலையை ஒட்டியுள்ள கழிவுநீர் கால்வாயை தூர் எடுக்க உத்தரவிட்டார்.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ் இவற்றை புதுப்பிக்கவும் ஆணை பிறப்பித்தார். இப்பகுதியில் பாதாள சாக்கடை பணி முடிவடையும் தருவாயில் உள்ளதால், தார்ச்சாலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அப்புறப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. கண்ணபிரான் மில் சாலை பகுதியில் கடந்த 50 வருடங்களாக குடியிருக்கும் மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என மேயரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர், இதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார். ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ராமமூர்த்தி, மண்டல தலைவர் ஜெயராம், சுகாதார குழு தலைவர் தாமரைச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.
Last Updated on Wednesday, 27 March 2013 11:15
 

சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF
தினமணி                 25.03.2013

சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

காட்டுவேகாக்கொல்லை - வேகாக்கொல்லை இடையே சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினர்.

பண்ருட்டி வட்டம், காட்டுவேகாக்கொல்லை - வேகாக்கொல்லை இடையே சாலை உள்ளது.

இதில் 1.5 கி.மீ. தூர சாலையை சிலர் ஆக்கிரமித்து மரம் மற்றும் மண் மேடு அமைத்திருந்தனர். சாலை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  பாதிக்கப்பட்டனர்.

மேலும் கலூரில் இருந்து ஆயிப்பேட்டை செல்லும் நகர பஸ் தடம் எண் 10, கடந்த 7 மாதங்களாக செல்லாமல் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என கடந்த சில வாரத்துக்கு முன்னர் வேகாக்கொல்லை கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில், பண்ருட்டி வட்டாட்சியர் பத்மாபதி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆதவன், தமிழரசி ஆகியோர் முன்னிலையில், நில அளவர் ஞானமணி அளவீடு செய்தார்.

பின்னர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர். வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி உடனிருந்தார்.

காடாம்புலியூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 


Page 24 of 204