Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்றாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை

Print PDF
தினமணி         23.03.2013

அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்றாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சிப் பகுதியில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் மாநகராட்சி மூலம் அகற்றப்படுகின்றன.

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற விளம்பரங்கள், அனுமதியை விட கூடுதலான அளவுகளில் வைக்கப்படுகின்றன. மேலும் நியான் விளக்குகள் மற்றும் டிஜிட்டல் விளக்குகள் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பும் விதமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அரசு நிறுவனங்களின் சுற்றுச் சுவர்கள், தனியார் சுவர்கள் ஆகியவற்றில் பெயிண்ட்டாலும், ஸ்டிக்கர் மூலமாகவும் விளம்பரம் செய்யப்படுகிறது. இது அரசு விதிகளுக்கு முரணானது.

அனுமதி இல்லாமல் செய்யப்படும் விளம்பரத்தில் உள்ள நிறுவன உரிமையாளர், கட்டட உரிமையாளர் அல்லது தனியார் நில உரிமையாளர், விளம்பரம் செய்யும் நிறுவனம் மீது மாநகராட்சி விளம்பர சட்டப்படி சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வழி உள்ளது.

எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கும் பொருட்டு விளம்பர நிறுவன உரிமையாளர்கள், தனியார் கட்டட, நில உரிமையாளர்கள் அவர்களாகவே விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை தொடரும்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களின் முன்பாக கட்டட  அனுமதி விளம்பரப் பலகை வைக்காவிட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 

கோலியனூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி           22.03.2013

கோலியனூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


விழுப்புரம் நீதிமன்றச் சாலையில் உள்ள கோலியனூர் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.

இக்கால்வாய் அருகே நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. அக் கடைகளை நடத்தும் சிலர் கோலியனூர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் இக்கால்வாய் சிறிய வாய்க்காலாக குறுகியது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினர். இந்த வாய்க்கால் அகலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

விழுப்புரம் நகராட்சியில் கால்வாய் பணிகள் தீவிரம்

Print PDF

தினமலர்            21.03.2013

விழுப்புரம் நகராட்சியில் கால்வாய் பணிகள் தீவிரம்

விழுப்புரம்:விழுப்புரம் பழைய கோர்ட் ரோடில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் பழைய கோர்ட் சாலையில் இருந்த வடிகால் வாய்க்கால் சேதமடைந்ததால், சுற்றுப்பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் வெளியேற வழி யின்றி பாதித்து வந்தது.

சாலையை பயன்படுத்தி வரும் பள்ளி மாணவர்கள், நகர போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனையடுத்து, நகராட்சி பொது நிதியில் 9.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பழைய கோர்ட் ரோடில் 300 மீட்டர் தொலைவில், 4 அடி ஆழத்திலும், 1.85 மீட்டர் அகலத்திலும், புதியதாக சிமென்ட் கால்வாய் அமைத்து வருகின்றனர்.

இந்த வாய்க்கால் இணையும் திரு.வி.க., வீதி சந்திப்பு பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் பணிகள் பாதித்து நின்றது. இந்த கடைகளின் முகப்பு ஆக்கிரமிப்புகள், நகராட்சி மூலம் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

இதனையடுத்து ஆக்கிரமிப்பு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்தது.

Last Updated on Friday, 22 March 2013 12:09
 


Page 25 of 204