Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF
தினமணி        14.03.2013

பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றம்

பண்ருட்டி பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை அகற்றினர்.

பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தரைக் கடைகளும், வாடகைக் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமித்து கடை வைக்கப்பட்டிருந்தது.

இதனால் பயணிகள் நிற்கக்கூட இடமின்றி தவித்தனர். மேலும் திருட்டுச் சம்பவங்கள் அதிக அளவு நடக்க ஏதுவாக இருந்து வந்தது.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என கடந்த சில நாள்களாக நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில் புதன்கிழமை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
தொட்டியத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலை சீரமைப்பு பணி

Print PDF
தினகரன்                      11.03.2013

தொட்டியம்: மதுரை காளியம்மன் கோயில் திருவிழாவிற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தொட்டியம் பேரூராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் அதன் தலைவர் தமிழ்ச்செல்வி திருஞானம் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சித்ரா,துணைத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:  வறட்சி நிதியாக தொட்டியம் பேரூராட்சிக்கு 10 ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, தொட்டியம் மதுரைகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தேர் செல்லும் பாதையில் சாலைகளை செப்பனிடும் பொருட்டும் மண் கொட்டி சீர்செய்யவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலர் சம்பத் நன்றி கூறினார்.
 
Page 26 of 204