Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

குடந்தை பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்க

Print PDF
தின மணி             20.02.2013

குடந்தை பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்க

கும்பகோணம்  மோதிலால் தெருவில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள்  ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள  மோதிலால் தெருவில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த தெருவின் இருபுறமும் தள்ளுவண்டியில் பழ வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இந்த தெருவினை கடந்துதான் மீன்மார்கெட் மற்றும் தஞ்சை மெயின்ரோடு, கல்லூரி, பள்ளிகளுக்கு பொதுமக்கள் சென்று வருவதால் இப்பகுதி கூட்ட நெரிசலாலும், பரபரப்பாகவும் எப்போதும் காணப்படும்.  இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் தஞ்சை சரக டிஐஜி ஜெயராமனுக்கு  மோதிலால் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது என்ற  புகார் சென்றது. இதையடுத்து டிஐஜி உத்தரவின்பேரில் கும்பகோணம் போலீஸார் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Last Updated on Thursday, 21 February 2013 12:15
 

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தின மணி                           21.02.2013

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர் செல்லும் வீதிகளான கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்குக் கோட்டை வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வட்டாட்சியர் ப.காந்தி முன்னிலையில் நடைபெற்றது.

நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். காவல் ஆய்வாளர் பாண்டித்துரை தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Thursday, 21 February 2013 11:16
 

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்48 மணி நேரம் "கெடு'

Print PDF

தினமலர்                         06.09.2012

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்48 மணி நேரம் "கெடு'

 மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், கடை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். துணை கமிஷனர் சாம்பவி, நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் தலைமையில் அதிகாரிகள், நேற்று இங்கு ஆய்வு செய்தனர். "கடையின் வெளியே "டிரே' அமைத்தல், கட்டடத்தின் வெளியே பலகை மேடை, ஒரே கடையில் இருவழியில் விற்பனை,' போன்ற, முறைகேடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"அவற்றை உடைத்து அப்புறப்படுத்த,' துணை கமிஷனர் சாம்பவி உத்தரவிட்டார். இரும்பு ஆயுதங்களை கொண்டு, ஆக்கிரமிப்புகள் நொறுக்கப்பட்டன. துணை கமிஷனரை சந்தித்த வியாபாரிகள் சங்கத்தினர், "மாலை 5 மணி வரை அவகாசம்,' கேட்டனர். ""தடையுத்தரவு பெற அவகாசம் கேட்கிறீர்கள். பல முறை நோட்டீஸ் அனுப்பினோம். நீங்கள் எடுக்கப்போவதில்லை, அதனால் நாங்கள் எடுக்கிறோம். பொருட்களுக்கு பாதிப்பு வராது,'' எனக்கூறி, அதிகாரிகள் நடவடிக்கையில் தீவிரம் காட்டினர். இதனால், வியாபாரிகள் ஏமாற்றமுற்றனர்.

கடைகளில், "காஸ் சிலிண்டர்' பயன்படுத்தியதை துணை கமிஷனர் கண்டித்தார். "சிலிண்டர் கைப்பற்றுவதை தடை செய்வதற்கான ஆணை பெற்றுள்ளதாக,' வியாபாரிகள் தெரிவித்தனர். ""போலீசார் கைப்பற்றுவதற்கு தான், கோர்ட் தடை ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சி விதிகளின் படி, பஸ் ஸ்டாண்டில் இரு ஓட்டல்களுக்கு மட்டும், காஸ் சிலிண்டர் பயன்படுத்த முடியும். சிலிண்டர் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்,'' என, துணைகமிஷனர் எச்சரித்தார். அவர் கூறியதாவது: கடைகளின் சுவரை இடித்து, இருபுறமும் வியாபாரம் செய்கின்றனர். 48 மணி நேரத்தில் சுவர் எழுப்பி, ஒதுக்கிய அளவிற்கு கடையை பயன்படுத்த வேண்டும். தவறினால், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். உதவிப்பொறியாளர்கள் ரங்கநாதன், தியாகராஜன் உடனிருந்தனர்.
Last Updated on Thursday, 06 September 2012 09:09
 


Page 30 of 204