Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ரவுண்டானா பணி: மேலப்பாளையம் சந்தை சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

Print PDF
தினமணி                   30.08.2012

ரவுண்டானா பணி: மேலப்பாளையம் சந்தை சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

திருநெல்வேலி, ஆக. 29: மேலப்பாளையம் சந்தை சந்திப்பில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் தொடங்கவுள்ளதை யொட்டி, அப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மாநகராட்சிக்கு உள்பட்ட மேலப்பாளையம் சந்தை நான்குமுனை சந்திப்புப் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

சேரன்மகாதேவியில் இருந்து திருநெல்வேலி வரும் சாலை, புதிய பஸ் நிலையத்தில் இருந்து பத்தமடை வழியாக செல்லும் சாலை, சந்திப்பில் இருந்து குறிச்சி வழியாக மேலப்பாளையம் வரும் சாலை, டக்கரம்மாள்புரத்தில் இருந்து சந்தை வழியாக வரும் சாலை ஆகிய 4 சாலைகள் இங்கு சந்திக்கின்றன.

இதனால் அங்கு எப்போது வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்பதால் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே, ரவுண்டானா அமைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இப் பணிக்காக தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பணி அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் புதன்கிழமை தொடங்கினர். உதவிப் பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் இப் பணியில் ஈடுபட்டனர்.

நேதாஜி சாலை, சந்தை முக்கு, வி.எஸ்.பள்ளிவாசல், அம்பை சாலை பகுதியில் 100 கடைகளின் முன் போடப்பட்ட ஷெட்டுகள், மேற்கூரைகள் அகற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த கடைகளும் இடிக்கப்பட்டன. தொடர்ந்து, அப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படும். மாநகராட்சி மூலம் மரங்கள் அப்புறப்படுத்தப்படும்.

பின்னர் ரவுண்டானா பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி மேலப்பாளையம் ஆய்வாளர் ஜெயசேகரன் தலைமையில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டனர்.
Last Updated on Friday, 31 August 2012 09:55
 

வந்தவாசியில் 27-ல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி             25.08.2012

வந்தவாசியில் 27-ல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வந்தவாசி, ஆக. 24: வந்தவாசி நகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆக. 27ஆம் தேதி அகற்றப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் ஈ.மனோகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வந்தவாசி நகராட்சி எல்லைக்குள்பட்டப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் போலீஸôர் பாதுகாப்புடன் நகராட்சி, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியோரால் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 27) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர்     23.08.2012

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பு நிரந்தர கட்டடங்களை அகற்றாமல், வாறுகால் சிலாப்புகளை அகற்றியதால், மக்கள் அதிருப்தியடைந்தனர்.

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், நகராட்சியினர், புதிய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, காசுக்கடை பஜார் பகுதி வாறுகால்களின் மேல் மூடிப்பட்டிருந்த சிலாப்பு கள், கற்கள், அகற்றம் செய்தனர்.

பல மாதங்களுக்கு முன், நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் வாறுகால்களை சேதப்படுத்தினர். இதனால், கடைகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். வாறுகால்கள் கட்டி தரப்படும் என, நகராட்சி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மாதங்கள் பல ஆகியும் வாறுகால்கள் கட்டி தரப்படவில்லை. நகரின் பல பகுதிகளில் நகராட்சி இடங்களில், நிரந்தர கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதை விட்டு, நேற்றும் பெயருக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். பஜார் பகுதிகளில் முறையான வாறுகால்களை கட்டியும், நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 


Page 32 of 204