Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

சேலம் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் ஆக்ரமிப்பாளர்களை தடுக்க கண்காணிப்பு குழு

Print PDF
தினகரன்     22.08.2012

சேலம் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் ஆக்ரமிப்பாளர்களை தடுக்க கண்காணிப்பு குழு
 
சேலம்,: சேலம் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வாராமல் இருக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் அசோகன் கூறினார்.

சேலம் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து பழைய பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தால் முதலில் அகற்றப்பட்டது. தற்போது புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று மேயர் சவுண்டப்பன், கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன், செயற்பொறியாளர் அசோகன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதில் புதிய பேருந்து நிலைய சைக்கிள் ஸ்டேண்டில் கட்டணம் வசூலிக்கப்படும் ரசீதை கமிஷனர் அசோகன் ஆய்வு செய்தார். அதில் ரூ.2, ரூ.3 என பேனாவால் எழுதி வழங்கப்பட்டது. அப்போது மாநகராட்சி சீல் வைக்கப்பட்ட அச்சு கட்டண ரசீது எங்கே என கமிஷனர் கேள்வி எழுப்பினார். பின்னர் சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமேஷ்பாபுவை அழைத்து, நாளை முதல் சைக்கிளுக்கான ரசீதில் ரூ.2 எனவும், மோட்டார் சைக்கிள் ரசீதில் ரூ.3 எனவும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதில் மாநகராட்சி சீலும் இருக்க வேண்டும். அந்த ரசீதை தான் வழங்க வேண்டும், என்றார்.

மேலும் எல்லையை மீறி சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற வேண்டும் என மேயர் சவுண்டப்பன் எச்சரித்தார். இதையடுத்து பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறைகளை கமிஷனர் ஆய்வு செய்தார். அதில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், அனைவருக்கும் ரசீது வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். பின்னர் கமிஷனர் அசோகன் நிருபர்களிடம் கூறும்போது, ‘சேலம் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியுள்ளோம். இனி ஆக்கிரமிப்பு கடைகள் வராமல் தடுக்கவும், பேருந்து நிலையங்களை சுகாதாரமாக வைத்திருக்கவும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதில், உதவி பொறியாளர், வருவாய் ஆய்வாளர், உதவி வருவாய் ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தொடர்ந்து பேருந்து நிலையத்தை கண்காணித்து வருவார்கள். புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார பணியை தனியார் நகைக்கடை நிர்வாகம் கவனித்து வருகிறது. அவர்களிடம் இரவு நேர துப்புரவு பணியை மேற்கொள்ள 10 பணியாளர்களை கேட்டுள்ளோம். அவர்கள் இன்னும் இரண்டு நாளில் இரவு சகாதார பணியை மேற்கொள்வார்கள்,‘ என்றார்.

பணியை செய்யாவிட்டால் சஸ்பெண்ட்சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 2 கழிவறைகளும் சுத்தமாக இருக்க வேண்டும் எனவும், இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சூரமங்கலம் மண்டல அதிகாரிகளுக்கு கமிஷனர் அசோகன் உத்தரவிட்டார். அப்போது மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா எனவும் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் நீங்கள் சஸ்பெண்ட் ஆகிவிடுவீர்கள் என அதிகாரிகளை கமிஷனர் கடுமையாக எச்சரித்தார்.
Last Updated on Wednesday, 22 August 2012 11:43
 

இலஞ்சி குளத்தில் ஆக்ரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர்              22.08.2012

இலஞ்சி குளத்தில் ஆக்ரமிப்பு அகற்றம்

தென்காசி : இலஞ்சி தொண்டைமான் குளத்தில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன.தென்காசி அருகே இலஞ்சி டவுன் பஞ்., பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் பயன்பாட்டிற்காக 16 குளங்கள் உள்ளன. சாரல் மழை ஏமாற்றியதால் இதில் பெரும்பாலான குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இலஞ்சி தொண்டைமான் குளத்திற்கு ஐந்தருவி வெண்ணமடை குளத்ததலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இக்குளத்தில் சிறிதளவு தண்ணீர் உள்ளது.

தொண்டைமான் குளத்து புரவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் நெல் விளைச்சல் முற்றி அறுவடைக்கு தயாராகி விடும். விவசாயிகள் இக்குளத்தின் கரை வழியே வயல் பகுதிக்கு சென்று வருகின்றனர். விவசாயிகள் ஓட்டி செல்லும் வாகனங்கள் குளத்து கரையில் செல்ல முடியாத விஷ செடிகள், புதர்கள் வளர்ந்து ஆக்ரமிப்பு செய்துள்ளன. இந்த ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இக்கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வகையில் குளத்தின் கரையில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. புல்டோசர் மூலம் விஷ செடிகள், புதர்கள் அகற்றப்பட்டன. கரையை செம்மை படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

 

திருச்சி மாநகரில் ஆக்கிரப்பு அகற்றம்

Print PDF

தினமலர்     18.08.2012

திருச்சி மாநகரில் ஆக்கிரப்பு அகற்றம்

திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளில் ஆக்ரமிப்புகளை திடீரென மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் பொது இடங்களை ஆக்கிரமித்து கடைகள் செயல்பட்டு வருகிறது. இதை என்ன காரணத்தாலோ மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.குறிப்பாக சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டில் பயணிகளின் நடைபாதையை கூட, அங்கு வாடகைக்கு கடை பிடித்திருப்போர் ஆக்கிரமிப்பு, தங்களின் கடையை விரிவுபடுத்தியிருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளால் பயணிகள் தினமும் அவதிப்பட்டனர்.நேற்று காலை ஒன்பது மணிக்கு திடீரென மாநகராட்சி அதிகாரிகள் பொக்லின், லாரிகள் சகிதம் சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட்டுக்கு வந்தனர்.

முதலில் பயணிகளின் நடைபாதையிலிருந்து ஆக்ரமிப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். அப்போது நடைபாதையிலிருந்து பொருட்களை பணியாளர்கள் லாரியில் ஏற்றினர்.அதற்கு கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆயினும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றுவதில் குறியாக இருந்து, அவற்றை அகற்றி விட்டனர்.இதனால் பஸ்ஸ்டாண்டில் வியாபாரிகள் தங்களின் கடைகளை நேற்று காலை சிறிது நேரம் அடைத்து வைத்திருந்தனர்.பின் சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் உள்ளே அனுமதியின்றி போடப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.அதேபோல் கலையரங்கம் தியேட்டர் அருகே மெக்டெனால்டு ரோட்டில் உள்ள பெட்டிக்கடையினர் ஆக்ரமித்து வைத்திருந்த பொருட்களையும் மாநகராட்சி ஊழியர்கள் அள்ளிச் சென்றனர்.காந்தி மார்க்கெட், வெங்காய மண்டி ரோடு ஆகிய இடங்களிலும் சாலையோரங்களில் இருந்த ஆக்ரமிப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

மாநகரில் நடந்த ஆக்ரமிப்பு அகற்றத்தை மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.வியாபாரிகள் குமுறல்: ஆக்ரமிப்புகளை திடீரென மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதால், வியாபாரிகளின் பொருட்கள் பலவற்றையும் அவர்கள் அள்ளிச் சென்றனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னரே மாநகராட்சி அதிகாரிகள் ஆக்ரமிப்பு அகற்றம் குறித்து தெரிவித்திருந்தால், பொருட்களை நாங்களே எடுத்து வைத்திருப்போம் என்று அவர்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.

Last Updated on Saturday, 18 August 2012 06:16
 


Page 33 of 204